கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

கோலி அவுட் ஆனா கவலையே இல்ல.. அதுக்கு காரணம் ரோகித்தின் இந்த மந்திரம்தான் – கில்கிறிஸ்ட் கருத்து

ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றி பெரிய நம்பிக்கையைக் கொடுத்து இருக்கிறது. இந்த வெற்றிக்கு மூலக் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடி பேட்டிங் அமைந்தது. இது குறித்து ஆஸ்திரேலியா லெஜெண்ட் முன்னாள் வீரர் பாடம் கில்கிறிஸ்ட் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் பேட்டிங் எதிர்பார்த்த அளவைவிட மிக மோசமாக இருக்கிறது. அவர் இன்னும் ஒரு அரைசதத்தை கூட ஆறு போட்டியில் அடிக்கவில்லை. மேலும் இதில் இரண்டு முறை ரன்கள் இல்லாமல் வெளியேறியிருக்கிறார். கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ரன்கள் இல்லாமல் ஆட்டம் இழந்தார்.

அதே சமயத்தில் லீக் சுற்றில் அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்திருந்தார். சூப்பர் எட்டு சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சரியாக விளையாடாத அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிராக கிடைத்த நல்ல தொடக்கத்தைத் தவற விட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வட்டியும் மூலமாக சேர்த்து கொடுத்து விட்டார். மொத்தம் 41 பந்துகளை மட்டும் சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் உடன் 92 ரன்கள் குவித்தது சதத்தை தவற விட்டு ஆட்டமிருந்தார். இவரது அதிரடியால் இந்திய அணி வெற்றி பெற்றதோடு ஆஸ்திரேலியா அணியும் அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேற்றி விட்டது.

- Advertisement -

இது குறித்து கில்கிறிஸ்ட் பேசும் பொழுது ” ரோஹித் சர்மா ஆப் தி ஃபீல்ட் ஒரு ஸ்டேட்மெண்ட்டை கொடுக்கிறார். எங்கள் அணி இப்படித்தான் விளையாடும் என்கிறார். ஆன் த ஃபீல்ட் சிறந்த உத்வேகம் மற்றும் பொழுதுபோக்கான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். டி20 கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் ஐபிஎல் புள்ளி விபரங்கள் என கேள்விகள் இருந்த எல்லாவற்றுக்கும் பதில் அளித்து இருக்கிறார். அவருடைய ஷாட் செலக்சன் சிறப்பாக இருந்தது. அது பந்துவீச்சாளர்களை என்ன செய்யும் என்று பார்த்தோம்.

இதையும் படிங்க : நாங்க அதில்லாம பட்டினியா இருந்தோம்.. திரும்ப அந்த அவுட்டுக்கு ரோகித்த விமர்சனம் செய்யாதிங்க – கவாஸ்கர் பேட்டி

அணியின் கேப்டன்கள் அடிக்கடி நாங்கள் முடிவு பற்றி கவலைப்படுவதில்லை பிராஸசில் கவனம் செலுத்துகிறோம் என்று கூறுகிறார்கள். ரோகித் சர்மா எல்லா நிலையிலும் ஆக்ரோஷமாக இருப்பதைப் பற்றி காட்டி இருக்கிறார். இதனால் அவருடைய பார்ட்னர் விராட் கோலி உடனே ஆட்டம் இழந்தால் கூட அது எந்த பாதிப்பையும் உருவாக்கவில்லை. அவர் கேப்டனாக இந்த வகையான நிபுணத்துவத்தை அணிக்கு கொடுக்கிறார். அணியினர் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Published by