“உலக கோப்பையை நாங்க ஜெயிப்போம்.. 2011 நினைவுகளை உங்களுக்கு திருப்பி தருவோம்!” – ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை சவால்!

0
241
Jadeja

இந்திய கிரிக்கெட்டில் 2011 ஆம் வருடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வருடம். அந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது!

மேலும் அந்த உலகக் கோப்பைத் தொடர் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமான சச்சின் டெண்டுல்கருக்கு கடைசி உலகக் கோப்பை தொடர். ஏற்கனவே ஐந்து முறை உலகக்கோப்பை விளையாடுகின்ற சச்சின் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற முடியவில்லை. இதன் காரணமாக அது உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் இக்கட்டான நிலையில் இருந்து கம்பீர் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் வென்று உலக கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது.

தற்பொழுது இந்த நினைவுகள் பற்றி பேசி உள்ள ரவீந்திர ஜடேஜா “2011ஆம் ஆண்டு இறுதிப் போட்டி நாள் அன்று எங்களுக்கு ஐபிஎல் பயிற்சி அமர்வு இருந்தது. ஆம் ஆனால் இந்தியா இறுதி போட்டியில் விளையாடுகின்ற காரணத்தினால் அன்று பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இறுதிப்போட்டியை பார்க்க அனைத்து வீரர்களும் ஒரே அறையில் இருந்தனர்.

இந்தியா ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்ததும் நாங்கள் பதற்றம் அடைந்தோம். ஆனால் தோனி மற்றும் கம்பீர் போட்டியை அன்று இந்தியாவுக்கு மாற்றினர்.

- Advertisement -

அன்றைய இரவு முழுவதும் நடந்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டுக்கு அது மிகச் சிறப்பான தருணம். உலகக் கோப்பையை வெல்ல ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் நடக்கின்ற காரணத்தினால்.

இந்த வடிவ உலகக்கோப்பை நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. இந்தியாவில் விளையாடுவதால் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாறுகிறது. வீரர்களாகிய எங்களுக்கு இந்திய நிலைமைகள் மிக நன்றாக தெரியும். இது எங்களுக்கு பெரிய நன்மை. 2023 உலக கோப்பையை வெல்வது 2011 உலகக் கோப்பை நினைவுகளை திரும்ப கொண்டு வரும்.

ஒவ்வொரு மைதானத்தின் நிலைமைகளையும் நாங்கள் நன்கு அறிந்திருப்பதால், எங்களின் எதிரணிகளை விட சிறப்பான இடத்தில் இருப்போம். அவர்களை விட சீக்கிரமாக எங்களால் ஆட்டத்தை ரீட் செய்ய முடியும்.

மேலும் மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்களின் ஆற்றலும் உற்சாகமும் எங்களுக்கு இருக்கும். அதே சமயத்தில் இது எளிதானது அல்ல. மிகவும் சவாலாக இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரராக நான் சவால்களை எதிர்கொள்ள விரும்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!