“கமெண்ட்ரி செய்த எங்களுக்கு தெரிஞ்சது.. ரோகித் சர்மாவுக்கு தெரியலையா?” – ஆகாஷ் சோப்ரா அதிரடி கேள்வி

0
259
Rohit

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோற்று இந்திய ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மேலும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நேற்று அவர்கள் இந்தியாவிற்கு எதிராக இந்தியாவில் பெற்ற வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது.

- Advertisement -

இங்கிலாந்து சமீப ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான முறையை பின்பற்றி வருகிறது. அவர்களுடைய அதிரடி பாஸ்பால் முறை சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்தியாவில் எடுபடாது என்று பரவலான கருத்துக்கள் இருந்தது.

இப்படியான நிலையில்தான் அவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் விளையாட இந்தியாவில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது மேற்கொண்டு பாஸ்பால் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையை இங்கிலாந்து தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு முக்கியமான புள்ளியாக அமைந்திருக்கிறது.

நாளை இங்கிலாந்து எத்தனை காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாஸ்பால் முறையை கடைப்பிடிக்கிறதோ, அதற்கு அழுத்தமான நம்பிக்கையை உருவாக்கிய இடமாக ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானம் இருக்கும். எனவே இப்படியான காரணங்களால் இந்த வெற்றி மிகப்பெரிய முக்கியத்துவத்தை அடைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் இந்திய அணியின் கையே ஓங்கி இருந்தது. இன்னும் சொல்லப்போனால் மூன்றாவது நாளின் பாதியிலும் கூட இந்திய அணியை டெஸ்டில் முன்னணியில் இருந்தது. அவர்கள் முதல் ஐந்து விக்கெட்டுகளை வேகமாக இழந்து இருந்தார்கள். ஆனால் அவர்களை 420 ரன்கள் இந்தியா செல்ல அனுமதித்ததுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பற்றி விமர்சித்துள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “நாங்கள் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருக்கும் பொழுது 200 ரன்கள் இலக்கு என்பது கடினமாக இருக்கும் என்பதாக நினைத்தோம். ஆனால் விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி அப்படி நினைக்கவில்லை. இங்கிலாந்தை அவர்கள் விரும்பியபடி சிங்கிள்கள் எடுக்க இந்தியா அனுமதித்தது. இதன் காரணமாக களத்தில் போப் மற்றும் ரேகான் அகமத் நான்காவது நாளில் ரிலாக்ஸ் ஆனார்கள். இது பெரிய பின்னடைவு.

இதையும் படிங்க : “தோனி பாய் தேவைதான்.. ஆனால் அவர் செய்தது போதும் ஓய்வெடுக்கட்டும்” – தீபக் சகர் பரபரப்பு பேச்சு

இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். சுழற் பந்துவீச்சுக்கு சாதகம் இருந்த நிலையிலும் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை தாண்டி பும்ரா அதிக விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை விட இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். ஆனால் மற்ற இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.