“நாங்க பேசி வச்சத.. தென் ஆப்பிரிக்கா செஞ்சுருச்சு.. அதான் தோத்துட்டோம்!” – சூரியகுமார் விளக்கம்!

0
371
Surya

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இன்று இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 36 பந்தில் 56 ரன்கள், ரிங்கு சிங் 39 பந்தில் 68* ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

இந்த முறை இந்திய கடையில் துவக்க ஜோடி ஜெய்ஸ்வால் மற்றும் கில் என மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் இருவருமே டக் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தார்கள்.

இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்தது. இதற்கு அடுத்து மழை சிறிது நேரம் பெய்த காரணத்தினால், தொடர்ந்து இந்திய அணி விளையாடாமல், தென் ஆப்பிரிக்க அணி 15 ஓவரில் 152 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு கொடுக்கப்பட்டது.

இதற்கடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு பவர் பிளவில் அதிரடியான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்றிக்ஸ் 27 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக 14 ஓவரில் இலக்கை எட்டி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

- Advertisement -

போட்டிக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் நாங்கள் தேவையான அளவுக்கு ஸ்கோர் எடுத்து இருந்ததாக நினைக்கிறேன். ஆனால் அவர்கள் முதல் ஐந்து ஆறு ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்தார்கள். இதுதான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் பிராண்ட்.

ஈரத்தில் பந்து வீசுவது கடினமாக இருந்தது. எப்படி இருந்தாலும் இது போன்ற சூழ்நிலைகளில் நாங்கள் விளையாடித்தான் ஆக வேண்டும். எனவே இது எங்களுக்கு ஒரு நல்ல கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது.

நாங்கள் எங்களுடைய கம்பர்ட் ஜோனிலிருந்து வெளியே இருக்கிறோம் என்று வீரர்களிடம் சொல்லி இருந்தேன். மேலும் எங்களுடைய அணி எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும். களத்தில் என்ன நடந்தாலும் அது களத்துடன் முடிந்துவிட வேண்டும் என்று அணிக்கு சொல்லி இருக்கிறேன். மேலும் அடுத்த போட்டிக்கு நான் மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!