“நாங்க நல்லாதான் ஆரம்பிச்சோம்.. ஆனா ரோகித் சர்மா வரை சேர்ந்து முடிச்சிட்டாங்க!” – கேப்டன் பாபர் அசாம் விரக்தி பேச்சு!

0
2306
Babar

இன்று இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி விளையாடிய போட்டி, அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

இன்று டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தது. மேலும் இரண்டு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் என்று முப்பதாவது ஓவரில் நன்றாகவே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை முகமது சிராஜ் வீழ்த்த, அங்கிருந்து மொத்த பாகிஸ்தான் அணியும் சரிந்து அப்படியே விழுந்தது.

பாகிஸ்தான் அணி 155 ரன்களில் இருந்து மேற்கொண்டு 36 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களுக்கு சுருண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் பந்துவீச்சில் ஏதாவது பாகிஸ்தான் செய்யலாம் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக எந்த இடத்தில் ரோகித் சர்மா விட்டாரோ அதே இடத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பித்து மொத்தமாக முடித்து விட்டார்.

- Advertisement -

இந்திய அணி பவர் பிளேவில் 79 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் இழந்து இருந்தது. அந்த இடத்திலேயே ஆட்டம் முடிந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். 32.3 ஓவரில் இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு அனுமதித்தது. இன்று ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணி எல்லா துறைகளிலும் வீழ்ச்சி அடைந்தது.

தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் “நாங்கள் நன்றாகத் தொடங்கினோம். நல்ல பார்ட்னர்ஷிப்புகளையும் கொண்டு வந்தோம். மேலும் சாதாரண முறையில் மேலும் பார்ட்னர்ஷிப்பை நகர்த்தி ஆட்டத்தை முடிக்க திட்டமிட்டு இருந்தோம்.

ஆனால் திடீரென்று ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது. எங்களால் ஆட்டத்தை நன்றாக முடிக்க முடியவில்லை. நாங்கள் தொடங்கிய விதத்தில் 280, 290 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். நாங்கள் நிர்ணயித்த இலக்கு சரியானது கிடையாது.

பந்து வீச்சில் புதிய பந்தில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. ரோகித் சர்மா விளையாடியது மிகச் சிறப்பான இன்னிங்ஸ். நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்தோம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை!” என்று வருத்தமாக கூறியிருக்கிறார்!