இந்தியாவுடன் விளையாட ஷாகின் அப்ரிடி வர நாங்கள் கடவுளை பிரார்த்திக்கிறோம் – பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர்!

0
326
Azar

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது தான், இந்திய கிரிக்கெட்டில் இந்த ஒரு ஆண்டுக்கால இடைவெளியில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களுக்கு முக்கியக் காரணம்!

இதையடுத்து இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் 22ஆம் தேதி துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியிலும், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

- Advertisement -

இப்படியான காரணத்தால் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு வழக்கமாக இருக்கும் எதிர்பார்ப்புகள் பரபரப்புகளை விட கூடுதலாகவே இருக்கிறது.

மேலும் இந்திய அணியில் இரு முக்கியமான வீரர்களான ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா மற்றும் இந்திய அணியின் பாஸ்ட் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பான ஜஸ்பிரித் பும்ரா இருவரும் இல்லாதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் நிலை இவ்வாறு இருக்க, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்தது டி20 உலகக் கோப்பை இந்தியாவுடனான முதல் போட்டியில் களமிறங்குவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா தெரிவித்திருந்தார். இதனால் பாகிஸ்தான் வட்டத்தில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் அசார் மகமூத் கூறும்பொழுது “இந்தியா-பாகிஸ்தான் போட்டி எங்கு எப்போது நடந்தாலும் அது உற்சாகம் மிகுந்ததாகத்தான் இருக்கும். பாகிஸ்தான் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது ஆனால் பேட்டிங் கொஞ்சம் வலுப்படுத்த வேண்டும். ஏற்கனவே பும்ரா இந்திய அணியில் இல்லாததால் இந்திய அணி பலவீனமடைந்து உள்ளது. ஷாகின் அப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்து பாகிஸ்தான் அணியில் விளையாடினால் நாங்கள் இன்னும் வலிமை பெறுவோம். இந்தமுறை துபாயில் விக்கெட்டுகள் வித்தியாசமாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் பந்து நன்றாக பேட்டுக்கு வரும். சமீப ஆட்டங்களில் பாகிஸ்தான் இந்திய அணிக்கு எதிராக நன்றாக விளையாடி இருக்கிறது. எனவே டி20 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக நன்றாக விளையாடி வெற்றி பெறும் ” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஷாகின் அப்ரிடி அணிக்கு திரும்புவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. அவர் மீண்டு வந்து பந்து வீசுவதை பார்க்க முடிகிறது. அவர் தனது மறு வாழ்க்கை முறையை சரியாக முடித்தால் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஷாகின் இந்தியாவுடனான போட்டியில் பந்து வீசுவார் என்று நம்புகிறேன். நான் உட்பட அனைத்து பாகிஸ்தான் மக்களும் அவருக்காகப் பிரார்த்தனை செய்கிறோம் ” என்று கூறியுள்ளார்!

- Advertisement -