“இந்த விக்கெட்டும் சரி இந்த ஸ்கோரும் சரி நாங்க நினைக்கவே இல்லைங்க.. அதுவா நடக்குது..!” – கேப்டன் கேஎல்.ராகுல் ஆச்சரியமான பேச்சு!

0
5967
Rahul

கேஎல்.ராகுல் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் கேப்டன் பொறுப்பை முதல் முறையாக ஏற்ற பொழுது தொடர்ந்து நான்கு தோல்விகளைச் சந்தித்தார்.

இதற்கு அடுத்து தற்போது வரை அவர் தலைமையின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது இந்திய அணி.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் சதம் அடித்து நல்ல துவக்கம் தந்த போதும், கேஎல்.ராகுல் உள்ளே வந்ததும், ஆபத்தான ஆடம் ஜாம்பா பந்தில் சிக்ஸர் அடித்து, மொமண்டத்தை விடாமல் தொடரச் செய்தார்.

மேலும் அவர் இசான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவருடனும் சேர்ந்து மிகப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக அரைசதமும் அடித்தார். கேப்டன்சி பொறுப்பிலும் கடந்த இரண்டு ஆட்டங்களாக அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது தொடரையும் ரோஹித் சர்மா வருவதற்கு முன்பாகவே வென்றும் இருக்கிறார்.

வெற்றிக்குப் பின் பேசியுள்ள கேப்டன் கேஎல்.ராகுல் “காலையில் இந்த விக்கெட்டை பார்த்த பொழுது பந்து இவ்வளவு சுழலும் என்று நினைக்கவில்லை. ஸ்கோர் போர்டில் நானூறு ரன்களைப் போடுவது உங்களுக்கு நம்பிக்கையை தருகிறது. ஆனால் உண்மையில் இதை நாங்கள் பிளான் செய்யவில்லை.

- Advertisement -

பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் அவர்களுடைய வேலையைச் செய்ய வேண்டும். நீங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும் மற்றும் வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டும்.

நாங்கள் சில கேட்ச்கள் தவறவிட்டோம். ஆனால் விளக்குகளின் கீழ் ஃபீல்டிங் செய்வது உடல்ரீதியாக சவால் ஆனது. வீரர்களை உடல்ரீதியாக தகுதியாக வைக்க பயிற்சியாளர்கள் தங்களால் முடிந்ததை செய்கிறார்கள். ஆனால் சில நேரம் பிழைகள் நடக்கத்தான் செய்யும்.

அதே சமயத்தில் அர்ப்பணிப்பு என்பது எப்போதும் இருக்கும். நடப்பதில் இருந்து நாங்கள் கற்றுக் கொள்வோம். அதைப் புரிந்து கொண்டு மேலும் முன்னேறுவோம். அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம்.

மேற்கொண்டு எது குறித்தும் இன்னும் விவாதிக்கவில்லை. ஆனால் மீண்டும் வீரர்கள் அணிக்குள் வரும் பொழுது அவர்கள் கவுன்ட் செய்வார்கள். உலகக் கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வீரர்கள் அதற்குள் நுழைய விரும்புவார்கள். அவர்கள் சவால்களுக்கு பழகிக் கொள்ள, களத்தில் இறங்க ஆர்வமாக இருப்பார்கள் என்று கூறி இருக்கிறார்!