இந்திய அணி 2011ல் கோப்பையை வென்றதற்கு காரணம் இவரா? – சேவாக் கருத்து!

0
390

2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதற்கு அப்போதைய இந்திய பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் முக்கிய பங்களித்தாரா? எனும் கேள்விக்கு சமீபத்திய பேட்டியில் பதில் கூறியுள்ளார் வீரேந்திர சேவாக்.

2023ஆம் ஆண்டுக்கான 50-ஓவர் உலகக்கோப்பை வருகிற அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை இந்தியாவில் நடத்தப்படுகிறது.

- Advertisement -

கடந்த முறை 2011ஆம் ஆண்டு இந்தியா, வங்கதேஷம் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து உலகக்கோப்பையை நடத்தியது. இம்முறை இந்திய கிரிக்கெட் வாரியம் தனியாக நடத்துகிறது.

உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணைகள் கடந்த திங்கள்கிழமை அன்று மும்பையில் பிசிசிஐ மற்றும் ஐசிசி இரு தரப்பும் இணைந்து வெளியிட்டது. இந்த நிகழ்வில் வீரேந்திர சேவாக், முத்தையா முரளிதரன் போன்ற ஜாம்பவான்கள் பங்கேற்றனர்.

அப்போது முத்தையா முரளிதரன் தன்னுடைய உலகக்கோப்பை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த வருடம் இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் என்றும் தெரிவித்தார். அதேநேரம் ஆசியகோப்பையை வென்ற இலங்கை அணியும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கருத்து தெரிவித்தார்.

- Advertisement -

அதன் பிறகு பேசிய வீரேந்திர சேவாக், “இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் இந்த வருடம் செமி பைனல் செல்வார்கள்.” என்று கருத்து தெரிவித்தார். அதன் பிறகு 2011ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை பற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். 2011ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டன் எப்படிப்பட்ட பயிற்சிகளை கொடுத்தார். அவர் தலைமையிலான இந்திய அணி எப்படி இருந்தது? என்பது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

“கேரி கிரிஸ்டன் அதற்கு முன்பு பெரிதளவில் பயிற்சியில் அனுபவம் பெற்றிருக்கவில்லை. இந்திய அணிக்கு வந்த பிறகு முழு பயிற்சியாளராக மாறினார். 2011இல் உலகக் கோப்பையை வென்ற பிறகு தான் பல அணிகளுக்கு பயிற்சியாளராக அழைக்கப்பட்டார். 2011க்கு பிறகு அவர் எந்த கோப்பையையும் வெல்லவில்லை.

கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் ணியுடன் சேர்ந்து கோப்பையை வென்றார். ஆனால் அதில் மிகப்பெரிய பங்கு வகித்தது ஆசிஸ் நெக்ரா என்பதை தொலைக்காட்சியின் மூலம் பார்க்க முடிந்தது. ஆகையால் இந்திய அணி தான் கேரி கிரிஸ்டன் என்னும் பயிற்சியாளரை உருவாக்கியது. அவர் வந்தபின் தான் இந்தியாவை பெரிய அணியாக மாற்றி கோப்பையை வெல்ல வைத்தார் எனும் பேச்சுக்கள் உண்மையில்லை.

தற்போது இருக்கும் ராகுல் ராகுல் டிராவிட் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இவர் தலைமையிலான அணி செமி பைனல் மற்றும் பைனல் வரை சென்றிருக்கிறது. கோப்பையை பெறவில்லை என்பதற்காக, அவ்வளவு தூரம் சென்றதை எவருமே பேசவில்லை

பயிற்சியாளர் ஒரு பங்கு கொடுத்தால் வீரர்கள் இரண்டு பங்காக செயல்பட வேண்டும். பயிற்சியாளரால் வீரருக்கும், வீரரால் பயிற்சியாளரும் புகழ் அடைவார்கள். இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். அது நடக்கவில்லை எனில், நினைத்ததை சாதிக்க இயலாது.

கேரி கிரிஸ்டன் நன்றாக செயல்படவில்லை என்று சொல்லவில்லை. சிறப்பாக பயிற்சி கொடுத்தார். அதேநேரம் வீரர்களும் துடிப்புடன் செயல்பட்டார்கள். அதனை குறைக்கும் வகையில் பேசுவது தவறு.” என்று சேவாக் பேட்டியில் தெரிவித்தார்.