“எங்ககிட்ட ஏலத்துல இதை சிஎஸ்கே செய்யும்னு தெரியும்” – ஹைதராபாத் முரளிதரன் சுவாரசிய தகவல்!

0
4934
SRH

நேற்றைய ஐபிஎல் மினி ஏலத்தில் வழக்கம்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டது. தங்களுக்கு தேவையான இடத்திற்கு இரண்டு வீரரை வாங்கி அசத்தியிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்திற்கு வரும்பொழுது அம்பதி ராயுடு இடத்தை நிரப்புவதை குறிக்கோளாக கொண்டிருந்தது. மேலும் அவர்களுக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய ஒரு வேகப்பந்துவீச்சாளர் தேவையாக இருந்தது.

- Advertisement -

மற்றபடி அந்த அணி மிக வலிமையாகவே காணப்பட்டது. அதே சமயத்தில் அவர்கள் கைகளில் 30 கோடிக்கு மேல் பணமும் இருந்தது. எனவே அவர்கள் நேற்றைய ஏலத்தில் தங்களுக்கு யார் வேண்டுமோ அதை அடித்து எடுத்துக் கொண்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.

நேற்றைய ஏலத்தை பொருத்தவரை ஆரம்பத்தில் மூன்று முறை ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத வேண்டியதாக அமைந்தது. முதல் முறையில் டிராவிஸ் ஹெட்டை வாங்குவதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே வென்றது.

நேற்று டிராவிஸ் ஹெட் ஏலத்திற்கு வந்த பொழுது பெரிய தொகைக்கு ஏலத்திற்கு போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கடைசியாக 6.80 கோடிக்கு ஏலத்திற்கு சென்றார். மேலும் அவருக்கு இரண்டு அணிகள் மட்டுமே மோதிக்கொண்டது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மொயின் அலி கிடைப்பதில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது. இதன் காரணமாகவே அவரது இடத்திற்கு ஹெட்டை தேடியது. இல்லையென்றால் நேற்றைய ஏலத்தில் இவரிடம் போய் இருக்காது.

தற்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளர் முரளிதரன் ஏலத்தில் ஹெட் வந்த பொழுது எவ்வாறான வியூகம் இருந்தது என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பேசும்பொழுது “சிஎஸ்கே டிராவிஸ் ஹெட்டை ஏலத்தில் தொடர்ந்து போகாது, பாதியில் நிறுத்திக் கொள்ளும் என்று எங்களுக்கு தெரியும். ஏனென்றால் அவர்களிடம் ஏற்கனவே டெவோன் கான்வே இருக்கிறார். நாங்கள் இதுபோன்ற குறைவான விலைக்கு அவரை வாங்க முடியும் என்று நினைக்கவில்லை.

நாங்கள் தொடக்க இடத்திற்கு ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேடிக் கொண்டிருந்தோம். எனவே இந்த இடத்திற்கு ஹெட் மிகப் பொருத்தமானவராக இருக்கிறார். அவர் பகுதி நேர பந்துவீச்சாளராகவும் சில ஓவர்கள் வீச முடியும். எனவே எங்களுக்கு அது ஒரு போனஸ்!” என்று கூறி இருக்கிறார்!