“நாளைக்கு பெரிய ஸ்கோருக்கு இந்த திட்டத்தை வச்சிருக்கோம்.. அவசரப்படாம வெயிட் பண்ணுங்க!” – பாபர் அசாம் பேட்டி!

0
4260
Babar

நேற்று இலங்கைக்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணி 23 ஓவரில் அபார வெற்றி பெற்று இருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு மிகவும் மோசமானது!

நியூசிலாந்தின் அபார வெற்றியின் காரணமாக, 275 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் அணியால் தேவையான ரன் ரேட்டை பெறவே முடியாது.

- Advertisement -

இதன் காரணமாக அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து மோதுவது 99 சதவீதம் முடிவாகி இருக்கிறது. எனவே அதிகாரப்பூர்வமாக நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறாவிட்டாலும் கூட, ரசிகர்களும் மீடியாக்களும் இந்தியா நியூசிலாந்து அரையிறுதியில் மோதுவதை பேசி வருகிறார்கள்.

நாளை ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால், அந்த அணி முதலில் எவ்வளவு ரன்கள் குவித்தாலும், குறைந்தபட்சம் 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எனவே பாகிஸ்தான் அணி 400 முதல் 500 ரன்கள் எடுத்தாக வேண்டும். இப்படியான நெருக்கடியான நிலையில்தான் பாகிஸ்தான அணி இருக்கிறது.

இதனால் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் என்கின்ற எதிர்பார்ப்பு முழுவதுமாக கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். இங்கிலாந்து அணிக்கு எதிராக இவ்வளவு பெரிய ரன்களுக்கு முதலில் சென்று அவர்களை குறைந்த ஸ்கோருக்கு ஆட்டம் இழக்க வைப்பது முடியாதது. மேலும் போட்டியை வெல்வதற்கு முன்பாக டாசை வெல்ல வேண்டியது பெரிய விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறும்பொழுது “இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் எங்களுடைய நிகர ரன்-ரேட் குறித்து திட்டமிட்டு இருக்கிறோம். இருந்தாலும் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக போய் விளையாட முடியாது. எனவே பவர் பிளேவில் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் திட்டம் இருக்கிறது.

பகார் ஜமான் 20 முதல் 30 ஓவர்கள் விளையாடினார் என்றால் எங்களால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு இன்னும் ஒரு போட்டி மீதி இருக்கிறது. எனவே அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியாது!” என்று முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கிறார்!