“எங்களுக்கு இந்த உத்தரவு வந்திருக்கு.. மனவேதனை இருக்கு ஆனா” – அக்சர் படேல் அதிரடியான பேச்சு!

0
18676
Axar

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு ஆரம்பத்தில் இருந்து இடதுகை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் இந்தியாவின் நிர்வாகத்தின் திட்டங்களில் இருந்தார்!

ஆனால் எதிர்பாராத விதமாக ஆசியக் கோப்பை தொடரில் காயம் அடைந்த அவரால் இந்திய உலகக் கோப்பை இறுதி அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அவருடைய இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்று ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார்.

- Advertisement -

தற்பொழுது இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக துவங்க உள்ள போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அக்சர் படேல் இடம் பெற்று இருக்கிறார். மேலும் இவர் உறுதியாக அடுத்த வருடம் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணி நிர்வாகத்தின் திட்டத்தில் இருப்பார்.

இவருடைய பேட்டிங்கை எடுத்துக் கொள்ளும் பொழுது இடது கை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவை விட டி20 கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் பொருத்தமாக இருக்கும் என்கின்ற காரணத்தினால், இவர் மீதான பார்வை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு உண்டு.

தற்பொழுது நடக்க இருக்கும் டி20 தொடர் குறித்து பேசி உள்ள அக்சர் படேல் “உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது மனவேதனையாக இருக்கிறது. ஆனால் இது முன்னேறி செல்ல வேண்டிய நேரம். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட எங்களிடம் ஒரு இளம் அணி இருக்கிறது. நாங்கள் எங்களை நிரூபிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். எங்களது அணியில் நிறைய ஆற்றல் இருக்கிறது.

- Advertisement -

அடுத்த வருடம் நடக்க இருக்கின்ற டி20 உலக கோப்பைக்கு முன்னால் எங்களிடம் 10 இல்லை 12 டி20 போட்டிகள் மட்டுமே கைவசம் இருக்கும். இதன் காரணமாக நாங்கள் எங்களுடைய பலத்திற்கு ஏற்ப விளையாட வேண்டும் என்று உத்தரவு கூறப்பட்டிருக்கிறது.

காயம் காரணமாக உலகக் கோப்பையில் முன்பிருந்த அதே மனநிலை இப்பொழுதும் இருக்கிறது. நான் மீண்டும் உடல் தகுதி பெற்று வந்திருக்கிறேன். மேலும் விளையாட்டின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்.

நான் என்னுடைய விளையாட்டில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. நான் என்னுடைய செயல் முறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். நான் என் மனநிலையிலும் அதிகம் மாற்றங்கள் செய்ய விரும்பவில்லை. காயத்திற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே செயல்பட விரும்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!