“இதுபோன்ற வீரர்களை நாம் கொண்டாட தவறி விட்டோம்”- இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதிய மைல் கல்லை எட்டப் போகும் இந்திய வீரரை புகழ்ந்த அஸ்வின்!

0
1084

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து நடைபெற இருக்கிறது இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர் . ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது . ஆஸ்திரேலியா அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் இதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதன் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரர் புஜாரா நூறாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார் . இதன் மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளை ஆடியோ வீரர்களின் பட்டியலில் புஜாராவும் இடம்பெறப் போகிறார் .

- Advertisement -

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இஎஸ்பிஎன் கிரிக்கெட் இன்ஃபோ இணையதளத்துக்கு எழுதியுள்ள கட்டுரையில் இந்திய அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் மற்றும் புஜாரா இவர்கள் இருவருக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அந்த கட்டுரையில் எழுதியுள்ள அஸ்வின்” புஜாரா மற்றும் விஜய் ஆகிய இருவரும் அணிக்காக மிகவும் கடுமையான பணியை சுமந்தவர்கள் ஆனால் இந்தியாவில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் இந்த வீரர்களுக்கு சற்று குறைவாகவே கிடைத்திருப்பதாக நம்புகிறேன் என எழுதி இருக்கிறார் .

மேலும் இது பற்றி தொடர்ந்து எழுதியுள்ள அவர்” கடினமான ஆடுகளங்களிலும் கடினமான சூழ்நிலைகளிலும் தங்களின் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் கிரீசில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து ஆடிய வீரர் புஜாரா . ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது அவர்களின் கடுமையான பந்து வீச்சு தாக்குதலுக்கு தனது தற்காப்பு ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்தவர் என்று தெரிவித்தார் . கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோரின் வேகங்களை சந்தித்து ஆடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று கூறிய அஸ்வின் அதனை இந்திய அணிக்காக நீண்ட காலமாக திறம்பட செய்து வருபவர் புஜாரா என குறிப்பிட்டார் .

முரளி விஜயும் இவரைப் போன்றே அணிக்காக விக்கெட்டை இழக்காமல் கழுத்தில் நின்று ஆடக்கூடிய ஒரு வீரர் எனக் குறிப்பிட்ட அஸ்வின் இந்த இரண்டு வீரர்களையும் நாம் போதுமான அளவு கொண்டாடவில்லை என வருத்தம் தெரிவித்தார் . ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க சுற்று பயணங்களின் போது இந்திய அணிக்காக துவக்க வீரராக இறங்கிய முரளி விஜய் புதிய பந்தில் அதிக நேரம் நின்று ஆடி நடு வரிசை வீரர்களின் பணியை எளிதாக்கினார் என கூறினார் . அதிக ரன்களை குறிக்கக்கூடிய வீரர்கள் மட்டும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இது போன்ற வீரர்களின் ஆட்டமும் டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டினார் அஸ்வின் .

- Advertisement -

மேலும் புஜாராவின் பேட்டிங் பற்றி கூறும் போது தன்னை சுற்றி நடக்கும் எந்த விஷயத்தையும் பற்றி கவலைப்படாமல் ஒரு மிருகம் தன் இரையின் மீது ஒற்றை எண்ணத்துடன் கவனம் செலுத்துவது போல அவர் தனது பேட்டிங்கின் மீது கவனம் செலுத்துகிறார் என தெரிவித்தார் அஸ்வின் . தற்போது இருக்கும் இந்திய அணியில் விராட் கோலி மட்டும் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதன் மூலம் புஜாரா இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர் என்கிற பெருமையை பெறுவார் .