“எங்களுக்கு நிறைய மேட்ச் இருக்கு.. ஆனா நாங்க ஒரு டீமா இல்லையே” – தென் ஆப்பிரிக்க கேப்டன் பேச்சு!

0
334
Markram

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சுற்றுப்பயணம் நாளை நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி முதல் ஆரம்பிக்க இருக்கிறது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அந்த நாட்டில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதற்கு இந்திய அணியின் தரப்பில் மூன்று கேப்டன்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க தரப்பில் இந்த மூன்று தொடர்களுக்கும் இரண்டு கேப்டன்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். பழைய கேப்டன் டெம்பா பவுமாவை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் கேப்டனாக தொடர விட்டு இருக்கிறார்கள். மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்தில் அவரை அணியில் சேர்க்கவும் இல்லை.

தென் ஆப்பிரிக்க அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டும் விளையாடக்கூடிய எய்டன் மார்க்ரம் வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவங்களுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். நாளை இவரது தலைமையில் இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க டி20 அணி களம் இறங்குகிறது.

தென் ஆப்பிரிக்க வீரர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு நிறைய கிரிக்கெட் போட்டிகள் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் பல்வேறு நாடுகள் நடத்தும் தனிப்பட்ட டி20 லீக்குகள். இந்த வீரர்கள் அனைவரும் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஒரே அணியாக சேர்ந்து விளையாடுவதற்கு நிறைய போட்டிகள் இல்லை. புதிய இளம் வீரர்கள் ஒரே அணியாக ஒன்று சேர்வதில் பிரச்சனை இதனால் உண்டாகிறது.

- Advertisement -

இதுகுறித்து புதிய கேப்டன் மார்க்ரம் கூறும்பொழுது “தற்போது டி20 அணியில் புதிய முகங்களாக இடம் பெற்ற வீரர்களுக்கு எதிராக நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் நிறைய விளையாடி இருக்கிறோம். ஆனால் சர்வதேச அளவில் ஒரு தொடரில் விளையாடுவதற்கு முன்பு அவர்களை கொஞ்சம் நெருக்கமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்வது அவசியம். நாங்கள் இவர்களுடன் சில நாட்களை செலவிட்டிருக்கிறோம். இவர்கள் என்ன மாதிரி என்று நாங்கள் புரிந்து இருக்கிறோம்.

இப்பொழுது எல்லாம் கிரிக்கெட்டின் இயல்பாக இதுதான் இருக்கிறது. மிக வேகமாக கிரிக்கெட் தொடர்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் புதிய வீரர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். புதிய வீரர்கள் வெகு சீக்கிரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.

டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக எங்களுக்கு நிறைய கிரிக்கெட் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஒரே அணியாக சேர்ந்து விளையாடுவதற்கு சர்வதேச போட்டிகள் நிறைய இல்லை. நாங்கள் ஒரே குழுவாக விளையாட விரும்புகிறோம் என்பதை புதிய வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பின்பு அவர்கள் அணிக்கு வரும்பொழுது அவர்கள் ஒரே பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட வசதியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!