“4 தோல்வி கவலை கிடையாது.. எங்க குறி டி20 உலக கோப்பைதான்” – பாகிஸ்தான் கேப்டன் ஷாகின் அப்ரிடி சவால்

0
110
Shaheen

பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணி தனது புதிய கேப்டன் ஷாகின் அப்ரிடி தலைமையில் நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்திருக்கிறது.

நடைபெற்று முடிந்த இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் நான்கு போட்டிகளை பாகிஸ்தான் நியூசிலாந்து அணி இடம் தோற்று தொடரை இழந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்த முறை பாகிஸ்தான் அணியில் பேட்டிங் யூனிட் மற்றும் பவுலிங் யூனிட்டில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டது. பாபர் அசாம் மூன்றாவது வீரராக வந்து அதிரடியான முறையில் விளையாடினார். தொடர்ந்து மூன்று அரை சதங்கள் இந்த தொடரில் அவர் அடித்திருக்கிறார்.

மற்ற கிரிக்கெட் வடிவங்களில் எப்படி இருந்தாலும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் பாகிஸ்தான் நன்றாகவே செயல்பட்டு வந்தது. ஆனால் நியூசிலாந்தில் தொடர்ந்து நான்கு டி20 போட்டிகளை தோற்று தொடரை இழந்தது மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள புதிய கேப்டன் ஷாகின் அப்ரிடி “இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், டி20 உலகக்கோப்பைக்கான அணியை உருவாக்குவதும், அணிக்கு உதவும் மாற்றங்களை கொண்டு வருவதும் எங்கள் நோக்கமாக இருந்தது. எதற்குமே நம்மால் உடனடியாக முடிவுகளை பெற முடியாது.

நீங்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். சில விஷயங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் அவர்கள் உடனே இந்த சூழ்நிலையில் வெற்றி பெற முடியாது.

நாங்கள் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறோம். நாங்கள் ஒரு அணியாக தொடர்ந்து முன்னேற விரும்புகிறோம். நாங்கள் அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் பொழுது, குறிப்பிட்ட வீரர் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என உறுதிப்படுத்தி இருக்கிறோம். தற்பொழுது வாய்ப்பு பெற்ற வீரர்கள் நாளை பாகிஸ்தானில் விளையாடும் பொழுது சிறப்பாக விளையாடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.