“நாங்க தோற்றது 4வது நாளில் இல்லை.. 2வது நாளில்தான்” – வித்தியாசமான காரணம் கூறும் டிராவிட்

0
172
Dravid

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

முதல் இன்னிங்சில் முதல் நாள் முடிவுக்கு முன்பாகவே இங்கிலாந்து அணி 246 ரன்கள் அவுட் ஆனது. அன்றைய நாளில் 23 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து 119 ரன்கள் அதிரடியாக குவித்தது. ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்திருந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து போட்டியின் இரண்டாவது நாளில் ஜெய்ஸ்வால் 80, கே எல் ராகுல் 86 என பெரிய இடங்களை எட்ட முடியாமல் வெளியேறினார்கள். கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் கிடைத்த துவக்கத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இறுதியாக ரவீந்திர ஜடேஜா அக்சர் பட்டேல் உடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இந்திய அணி 400 ரன்கள் கடப்பதற்கு உதவி செய்தார். அவரும் சதம் அடிக்க முடியாமல் 87 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்து, 231 ரன்கள் இலக்கு வைத்து, 202 ரன்னில் இந்திய அணியை சுருட்டி அபார வெற்றி பெற்றது.

இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “இன்று சவாலான ஒரு நாளாக இருந்தது. எனவே இந்திய அணி குறித்து நான் எதுவும் குறை சொல்ல மாட்டேன். உண்மையில் ஏதாவது சொல்வது என்றால் நாங்கள் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பொழுது 70 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம்.

- Advertisement -

அன்றைய இரண்டாம் நாளில் பேட்டிங் செய்வதற்கு நிலைமைகள் மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள் அப்போது நல்ல தொடக்கத்தையும் பெற்றோம். ஆனால் எங்களால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இதையும் படிங்க : U19 உலக கோப்பை.. ஐபிஎல் லக்னோ அணி இளம் வீரர் அதிரடி சதம்.. 201 ரன் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி அசத்தல்

இந்த ஆடுகளத்தில் நான்காவது நாளில் 230 ரன்கள் என்பது எடுக்க கூடிய ரன்கள் இல்லை. இது மிகவும் சவாலான இலக்கு. எங்களுக்கு இந்த இலக்கை துரத்துவதற்கு ஒரு விதிவிலக்கான ஆட்டம் யாரிடமாவது தேவைப்பட்டது. ஆனால் யாரும் அப்படி விளையாடவில்லை” என்று கூறி இருக்கிறார்.