“இந்தியா கூட தோத்துட்டோம்.. அதுக்கு இது அர்த்தம் இல்ல!” – முதல் முறையாக மௌனம் கலைத்த முகமது ரிஸ்வான்!

0
21412
Rizwan

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரசிகர்களால் பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமைந்திருந்தது!

இப்படி பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த போட்டியில் பாகிஸ்தான அணி மிக சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஒரு தலைப்பட்சமாக வென்றது.

- Advertisement -

இந்தப் போட்டி பொதுவான கிரிக்கெட் ரசிகர்களுக்கு எந்தவித பரவசத்தையும் தரக்கூடியதாக அமையவில்லை. இந்திய ரசிகர்களுக்கு இந்தியா அபாரமாக வென்றதில் மகிழ்ச்சி. அதே சமயத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய சோகமாக அமைந்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் முன் வைத்தார்கள். பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சோயப் மாலிக் வெளிப்படையாக கூறினார்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியின் போது முகமது ரிஸ்வான் ஆட்டம் இழந்து வெளியேறிய பொழுது, இந்திய ரசிகர்கள் அவரை நோக்கி மதக் கோஷங்கள் எழுப்பியது தற்பொழுது பெரிய சர்ச்சையாக மாறி நிற்கிறது. இது சம்பந்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு புகார் கொடுத்துள்ளது.

அதே சமயத்தில் முகமது ரிஸ்வான் காலத்தில் நமாஸ் செய்வது தவறு என்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியிருக்கிறார். இப்படி ஆதரவு எதிர்ப்பு என்று இந்த பிரச்சனை ஒருபுறமாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவுடன் ஆன தோல்விக்கு பின் முதல்முறையாக பேசிய முகமது ரிஸ்வான் கூறும் பொழுது ” நாங்கள் இந்தியாவுடன் தோற்றதால், நாங்கள் திறமையின் அடிப்படையில் உலகில் கீழே இருக்கிறோம் என்று அர்த்தம் கிடையாது. முழு ஆட்டமும் திறமை மற்றும் விழிப்புணர்வின் அடிப்படையில்தான் இருந்தது. எங்களது திறமை மிகச் சிறப்பாகவே இருக்கிறது. அதை வரும் காலத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நாங்கள் நிரூபிப்போம்!” என்று கூறியிருக்கிறார்!

பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியா அணியை பெங்களூரிலும், அதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அணியை சென்னையிலும் சந்தித்து விளையாட இருக்கிறது. இந்த இரண்டு போட்டியுமே பாகிஸ்தான் அணிக்கு மிக முக்கியமானது!