“ஆஸி விட நாங்க மோசமா இல்ல.. அவங்கள நிச்சயம் ஜெயிப்போம்!” – புது கேப்டன் குசால் மெண்டிஸ் சவால்!

0
738
Mendis

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நாளை மிக முக்கியமான ஆட்டத்தில் லக்னோ மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன!

ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்து, அரைஇறுதி வாய்ப்புக்கு அடுத்து வரக்கூடிய எல்லா போட்டிகளையும் வெல்ல வேண்டிய ஒரு சிறு கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இலங்கை அணி தன்னுடைய முதல் இரண்டு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்து, உலகக் கோப்பை தொடரை கௌரவமாக முடிக்க சில வெற்றிகளை பெற வேண்டிய இடத்தில் இருக்கிறது.

இப்படியான நிலையில் இலங்கை அணியின் கேப்டன் டசன் சனகா காயத்தால் உலக கோப்பை தொடரிலிருந்து முற்றிலுமாக விலகி இருக்கிறார். தற்பொழுது சரியான ஃபார்மில் இல்லாத அவருடைய விலகல், அனைத்து பெரிய பாதிப்பை கொண்டு வராது என்றாலும் கூட, இது ஒரு சிறிய பின்னடைவுதான்.

இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர் சமிகா கருணரத்னே அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இலங்கை அணியின் புதிய கேப்டன் குசால் மெண்டிஸ் பேசும் பொழுது “ஆமாம் நாங்கள் இரண்டு ஆட்டங்களை தோற்று இருக்கிறோம். ஆனால் எங்களுடைய இரண்டு தோல்விகளை பார்க்கும் பொழுது நாங்கள் ஆஸ்திரேலியாவை விட சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறோம் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு எங்கள் அணியை பற்றிய சில சந்தேகங்கள் இருக்கும்.

நாங்கள் விரைவில் எல்லாவற்றையும் மாற்றி அமைக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப தங்களுடைய செயல்பாட்டை தருவார்கள் என்று நான் நம்புகிறேன். நாங்கள் மட்டுமல்ல உயர்தர பந்துவீச்சு தாக்குதல் கொண்ட அணிகள் கூட 300, 350 ரன்கள் தந்து வருகின்றன.

உலகக் கோப்பைக்கு வரும் முன்பு நான் இவ்வளவு அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடிய பிறகு பேட்டிங் செய்ய சாதகமாக ஆடுகளங்கள் இருப்பதால், என்னால் சுதந்திரமாக அதிரடியாக பேட்டிங் செய்ய முடியும் என்று புரிந்து கொண்டேன்.

தற்பொழுது நான் பேட்டிங் அணுகு முறையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. ஏனென்றால் பந்துவீச்சாளர்கள் புதிய திட்டத்துடன் வந்து தாக்குதல் தொடுப்பார்கள். நான் கேப்டனாக இருந்தாலும் பேட்டிங் செய்யும் அணுகுமுறையை மாற்ற மாட்டேன். ஏனென்றால் நான் அதிரடியாக ரன்கள் குவித்தால்தான் எங்களால் ஆட்டங்களை வெல்ல முடியும்!” என்று கூறியிருக்கிறார்!