“ஆசிய கோப்பையில் இருந்தது நாங்க இல்ல… இந்தியாவுக்கு வரப்ப வேற மாதிரி இருப்போம்!” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் பரபரப்பு பேச்சு!

0
2471
Pakistan

இந்த முறை பாகிஸ்தான் அணிக்கு ஆசியக் கோப்பையில் படுதோல்வி கிடைத்திருக்கிறது. எதிர்பாராத இந்த தோல்வி அந்த அணியை முற்றிலுமாக முடக்கி இருக்கிறது!

அந்த அணியை சுற்றி பலவிதமான சர்ச்சையான கருத்துக்கள் தொடர்ந்து யூகங்களாக கூறப்பட்டு வருகின்றன. அணி வீரர்களுக்கு இடையே ஆன ஒற்றுமை, வீரர்கள் மாற்றம் என நிறைய விஷயங்கள் பேசப்படுகிறது.

- Advertisement -

குறிப்பாக ஷாகின் ஷா அப்ரிடி துணை கேப்டன் ஆக நியமிக்கப்படுகிறார் என்றும், ஆசியக் கோப்பை தொடரில் சுழற் பந்து வீச்சில் சரியாக செயல்படாத சதாப்கான் நீக்கப்பட்டு புதிய சுழற் பந்துவீச்சாளர் கொண்டுவரப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆசியக் கோப்பை தொடருக்கு வருவதற்கு முன்பு பாகிஸ்தான் அணி சிறப்பான நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. மேலும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்திலும், துவக்க ஆட்டக்காரர்கள் இருவர் முதல் 10 இடங்களிலும் இருந்தார்கள்.

இதன் காரணமாக பாகிஸ்தான் தரப்பு மிகுந்த நம்பிக்கையோடு காணப்பட்டது. இந்தியாவை விட எல்லா அம்சங்களிலும் பாகிஸ்தான் அணி கொஞ்சம் அதிக பலத்தோடு இருப்பதாக கூறப்பட்டது. எனவே இந்த முறை 39 வருடங்களில் முதல்முறையாக ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் சந்திக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வழக்கம் போல் எல்லாம் எதிர்பார்ப்புக்கு மாறாகவே நடந்தது. இதனால் கேப்டன் பாபர் அசாம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் மியான்ட்தத் கூறும் பொழுது
“இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆசியக் கோப்பையில் மற்ற எல்லா பாகிஸ்தான் வீரர்களும் சரியாக செயல்படாத பொழுது, பாபர் அசாமை மட்டும் ஏன் குற்றம் சாட்டுகிறிர்கள்?. பாருங்கள் ஆசியக் கோப்பையில் விளையாடியது போல பாகிஸ்தான் அணி மோசமானது கிடையாது. இந்த அணிக்கு நல்ல வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுங்கள்.

தற்போது ஒரே விஷயம் என்னவென்றால், இந்தியாவில் பெரிய மக்கள் கூட்டத்திற்கு எதிராக விளையாடுவதற்கு எவ்வளவு விரைவாக உங்களை சரி செய்து கொள்ள முடியுமோ செய்து கொள்ளுங்கள். உங்களுடைய இறுதி அணி எதுவென்கிற சஸ்பென்ஸ் எவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வருகிறதோ அவ்வளவு உங்களுக்கு நல்லது!” என்று கூறி இருக்கிறார்!