“நாங்கள் வெட்கப்பட்டு தலை குனிந்து நிற்பதற்கு இங்கு வரவில்லை” – ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் மெக் டொனால்ட் காட்டமான பதில்!

0
5860

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே யான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது . நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்றாம் நாளை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இந்த டெஸ்ட் போட்டிகளின் தோல்வியால் ஆஸ்திரேலியா அணியின் மீதான விமர்சனங்கள் வலுத்து வருகின்றன . முன்னாள் வீரர்கள் பலரும் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சி மற்றும் இந்த தொடருக்கான தயாரிப்புகளை குறை கூறிவரும் நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மேக்டொனால்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பின் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார் .

- Advertisement -

இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் ” நாங்கள் இனிவரும் டெஸ்ட் போட்டிகளிலும் எங்களது பயிற்சி முறைகளை மாற்றப் போவதில்லை . நாங்கள் இந்தியாவில் வந்து இறங்கி பெங்களூரில் பயிற்சியை தொடங்கியதில் இருந்தே சரியான முறையில் தான் பயணிக்கிறோம் . எல்லா வீரர்களும் போட்டிக்கு நன்றாகவே தயாராக இருக்கிறார்கள் . நாங்கள் பயிற்சி முறையில் எந்தவித மாற்றங்களையும் செய்யப்போவதில்லை” என அவர் கூறியிருக்கிறார்.

இதுபற்றி தொடர்ந்து பேசிய அவர் ” இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் நாங்கள் நன்றாக தயாராகி வந்திருப்பதாகவே உங்களுக்கு தோன்றியிருக்கும் . ஆனால் மூன்றாவது நாள் ஆட்டத்தை பார்த்து உங்களது கருத்தில் மாறுபாடு ஏற்படலாம். ஒரு மணி நேரத்தின் மோசமான ஆட்டம் மக்களை கடந்த காலத்தை மறந்து விமர்சிக்க வைத்து விடுகிறது” என்று கூறினார் .

- Advertisement -

மேலும் இது பற்றி தனது கருத்தை தெரிவித்த ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ” மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு நாங்கள் தயாராகவே இருந்தோம் . அந்த ஒரு மணி நேரத்தில் நடந்த விஷயங்கள் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை நான் மறுக்கவில்லை . இந்திய வந்து பேச்சாளர்கள் எங்களுக்கு வைத்த தேர்வில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம்” என்று கூறினார்.

தொடர்ந்து தனது கருத்தை பதிவிட்ட மேக் டொனால்ட்” எங்களது ஆட்டத்தின் அணுகுமுறை மற்றும் பயிற்சிகளை பற்றிய விமர்சனங்கள் கடுமையாக எழும் என்று எங்களுக்கு தெரியும் அது நியாயமானது தான் . போட்டி திட்டத்தில் இருந்த அணுகு முறையில் இருந்து ஒரு சில வீரர்கள் விலகிச் சென்றது ஆட்டத்தின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டது . திட்டங்களை நாங்கள் ஒரு அணியாக செய்திருக்க வேண்டும்” என்று கூறினார்

“நாங்கள் அதைவிட சிறப்பாக செய்திருக்க வேண்டும். போட்டியின் போது எங்கள் கைகள் மேலோங்கி இருந்த தருணங்களை நாங்கள் வென்றிருக்க வேண்டும் . ஆனால் அந்த வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டு விட்டோம் . நாங்கள் வெட்கப்பட்டு தலை குனிந்து நிற்பதற்கு இங்கு வரவில்லை . மீதம் இருக்கின்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் எங்களது சிறப்பான பங்களிப்பை நிச்சயமாக வழங்குவோம்” என்று கூறி முடித்தார் .

- Advertisement -