“இந்தியாவைப் பார்த்து பயம் கிடையாது.. விளையாட காத்துகிட்டு இருக்கோம்!” – தென் ஆப்பிரிக்க வீரர் அதிரடி பேச்சு!

0
917
ICT

நேற்று தென்னாபிரிக்கா அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 190 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறி இருக்கிறது.

நேற்றைய போட்டியில் முதலில் மெதுவாக ஆரம்பித்த தென் ஆப்ரிக்க அணி விக்கெட்டுகளை கைவசம் வைத்து இறுதியில் அதிரடியாக விளையாடி 357 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியை 167 ரன்களுக்கு சுருட்டி 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் பந்துவீச்சு தாக்குதலும் மிகச் சிறப்பாக இருந்து வருவது அந்த அணியை பலம் பெற்றதாக மாற்றுகிறது.

தற்போது உலகக்கோப்பையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளின் பவுலிங் யூனிட் மிகவும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த இரு அணிகளும் விளையாடும் போட்டிக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

நேற்றைய போட்டியில் 131 ரன்கள் குறித்து ஆட்டநாயகன் விருது பெற்ற வாண்டர் டெசன் பேசும் பொழுது “கண்டிப்பாக இந்த உலக கோப்பை தொடரில் நாங்கள் சிறப்பாக செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன். நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் எப்படி விளையாட விரும்புகிறோம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.

- Advertisement -

எங்கள் போட்டி மதிப்பாய்வு கூட்டங்களில் நாங்கள் தொடர்ந்து கொண்டுவரும் எண்கள் எவ்வளவு என்று பார்க்கிறோம். பயிற்சியாளர்கள் எங்களுக்கு தரும் அளவுக்கு நாங்கள் ரன்கள் குவித்து வருகிறோம். எனவே நாளை முடிவில் உங்களை விட யார் பெரியவர் என்று பார்ப்பது பொருத்தமற்றது.

நாங்கள் விளையாட விரும்பும் விதத்தில் நாங்கள் விளையாடினால், நாங்கள் எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தினால், எங்களால் எதையும் செய்ய முடியும்.

எனவே இந்தியாவில் இந்தியாவுடன் விளையாடுவது பெரிய நிகழ்வு. அவர்கள் நன்றாக விளையாடுகிறார்கள் அவர்களிடம் எல்லா திறமையும் இருக்கிறது. ஆனால் நாங்கள் எப்படி விளையாட விரும்புகிறோமோ அதே போல் விளையாடினால், நாங்கள் இந்தியாவுக்கு எதிராக மிக வலிமையான இடத்தில் இருப்போம்.

சவால் என்பது அழுத்தத்தின் கீழ் இருப்பது. நாங்கள் அதைத்தான் இந்தியாவுக்கு எதிராக செய்யப் போகிறோம். ஏற்கனவே இங்கு அவர்களை வென்று இருக்கிறோம். தற்போது இது உலகக் கோப்பை. ஆனாலும் பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது. நாங்கள் இதையெல்லாம் அதிகம் பார்க்க மாட்டோம்!” என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார்!