“நாங்க சில காம்பினேஷனை ட்ரை பண்ண போறோம்.. இதுக்கு சில பிளான் வச்சிருக்கோம்” – ரோகித் சர்மா பேட்டி

0
58
Rohit

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்தியாவில் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்றாவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்க இருக்கிறது.

ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 தொடரை கைப்பற்றி இருக்கிறது. எனவே மூன்றாவது போட்டியில் வாய்ப்பு பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கான டாசிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெற்றி பெற்றார். ஆனால் கடந்த இரண்டு ஆட்டங்களில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்த போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மேலும் இந்திய அணியின் தரப்பில் மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல ஆப்கானிஸ்தான் அணிகளும் புதிய விளையாட வாய்ப்பு பெறாத மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு கடைசி போட்டியை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

டாஸ் நிகழ்வுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா “நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். இதற்கு ஆடுகளம் கண்டிஷன் எதுவும் காரணம் கிடையாது. நாங்கள் முதல் இரண்டு போட்டிகளில் முதலில் பந்து வீசினோம். அதனால் இப்பொழுது பேட்டிங் செய்கிறோம்.

நாங்கள் சில காம்பினேஷன்களை செட் செய்து, சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டி இருக்கிறது. நாங்கள் சில குறிப்பிட்ட பரிசோதனை முயற்சிகளை செய்ய இருக்கிறோம். புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு இது எங்களுக்கு மற்றொரு வாய்ப்பு. நாங்கள் இந்த போட்டியில் மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்திருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராகிம் ஜட்ரன் கூறும்பொழுது “நாங்களும் முதலில் பந்து வீசவே விரும்பினோம். இந்த தொடரில் இருந்து சில பாசிட்டிவான விஷயங்களை எடுத்து இருக்கிறோம். இன்னும் அப்படி என சில விஷயங்களை இன்று முயற்சி செய்வோம். இந்த போட்டிக்கு எங்கள் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.