“டிரெஸ்ஸிங் ரூம் ல மழை நிக்க கூடாதுனு நாங்க எல்லாரும் வேண்டிகிட்டோம்!” – ஓபன் ஆக பேசிய பகார் ஜமான்!

0
3230
Fahar

நேற்று பெங்களூர் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், 402 ரன் இலக்கை துரத்திய பாகிஸ்தான அணி 25 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து மழையின் காரணமாக 21 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பரபரப்பான சூழலில் வெற்றி பெற்ற காரணத்தினால் பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்திருந்தால் பாகிஸ்தான் அணிக்கு 100% அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்திருக்கும்.

- Advertisement -

தற்பொழுது நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு போட்டி மீதம் இருக்கிறது. நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிராக தோற்க வேண்டும், பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். இல்லை நியூசிலாந்து வென்றாலும் கூட பாகிஸ்தான் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இப்படியான சூழ்நிலைதான் நிலவுகிறது.

நேற்றைய போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி 81 பந்துகளில் 128 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்ற பகார் ஜமான் போட்டியில் மழையின் போது என்ன நடந்தது? என்று கூறியிருக்கிறார்.

இது சம்பந்தமாக அவர் கூறும் பொழுது “நான் முன்பே சொல்லியிருந்தது போல மழை வரும் என்று நாங்கள் நினைத்தோம். அதன்படியே நாங்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டோம். நாங்கள் பேட்டிங்கில் இருந்த பொழுது 15 ஓவர்களின் போது மெதுவாக தூரல் வந்தது.

- Advertisement -

அந்த நேரத்தில் டக்வோர்த் லீவிஸ் வேலை செய்யாது. ஆனால் 20 ஓவர்களின் முடிவின் பொழுது நாங்கள் என்ன நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள எங்கள் அணி நிர்வாகத்திடம் கேட்டு வைத்தோம். அதை மனதில் வைத்தே நாங்கள் மேற்கொண்டு விளையாடினோம்.

நிச்சயமாக அந்த நேரத்தில் திட்டமிடுவது மிகவும் முக்கியமானது. திட்டமிடாமல் விளையாடுவது மிகவும் கடினம். போட்டி குறித்து மொத்தமாக நேற்றும் ஒரு திட்டம் இருந்தது. மழையின் போதும் எங்களிடம் திட்டமிருந்தது.

நாங்கள் விளையாடி மழை வந்த பொழுது ட்ரெஸ்ஸிங் ரூம் திரும்பி விட்டோம். அப்பொழுது ஏறக்குறைய போட்டி துவங்கி ஒன்பதரை மணி நேரங்கள் ஆகியிருந்தது. இதற்குமேல் போட்டி நடக்காது என்பது தெரியும். ஆனால் அதற்குள் எதுவும் நடந்து விடக்கூடாது தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்தோம்!” என்று வேடிக்கையாக கூறியிருக்கிறார்!