WC 2023.. டெவோன் கான்வே உலக கோப்பை 2 மெகா உலக சாதனைகள்.. மேலும் ஒரு நியூசிலாந்து ரெக்கார்ட்!

0
1872
Conway

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை துவக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே மற்றும் சச்சின் ரவீந்திர இருவரும் மிகச் சிறப்பான கண்காட்சியை நடத்தி காட்டி இருக்கிறார்கள். உலகக்கோப்பை அருமையாக துவங்கி இருக்கிறது!

முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன்கள் இலக்கை துரத்த துவங்கிய நியூசிலாந்து அணிக்கு 10 ரன்களில் முதல் விக்கெட் விழுந்தது.

- Advertisement -

ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கான்வே மற்றும் ரவீந்திரா இருவரும் இங்கிலாந்து அணிக்கு மேற்கொண்டு ஒரு விக்கெட்டையும் தரவில்லை, கருணையையும் காட்ட வில்லை.

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன், மிக நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட அபாயகரமான அணி என்பது குறித்து எல்லாம் இங்கிலாந்து பற்றி நியூசிலாந்து வீரர்களுக்கு எந்த கவலையும் இல்லாதது போல் விளையாடினார்கள்.

இந்தப் போட்டியில் கான்வே ஆட்டம் இழக்காமல் 152 ரன்கள் குவித்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் வெற்றிகரமான ரன் துரத்தலின் போது ஒரு பேட்ஸ்மேன் எடுத்த மிக அதிகபட்ச ரன்னாக இது பதிவாகி இருக்கிறது. இது கான்வே பெயரில் உலகக் கோப்பையின் உலகச் சாதனையாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

உலகக் கோப்பை வெற்றிகரமான ரன் துரத்தலின் போது அதிகபட்ச ரன் எடுத்தவர்கள்:

டெவோன் கான்வே 152*
லகிரு திரிமனே 139*
ஸ்டீபன் பிளம்மிங் 134*
சச்சின் டெண்டுல்கர் 127*
ஷாகிப் அல்ஹசன் 124*
ரச்சின் ரவீந்தரா 123*
ரோகித் சர்மா 122*

மேலும் இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் 273 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. இது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ரன் துரத்தலின் போது பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன் ஆகும். மேலும் ஒரு உலகக் கோப்பையின் ஒரு போட்டியில் இரண்டு நியூசிலாந்து வீரர்கள் சதம் அடிப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது!