சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளில் சதம் அடித்து அசத்திய தலைவரின் தீவிர ரசிகர் ; தலைவர் ஸ்டைலில் சதத்தை கொண்டாடிய வீடியோ இணைப்பு

0
2493
Venkatesh Iyer 151 in Vijay Hazare Trophy

இன்று விஜய் ஹசாரே டிராபி தொடரில் குரூப் டி பிரிவில் மத்திய பிரதேசம் மற்றும் சண்டிகர் அலைகள் மோதி விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா நிதானமாக விளையாடி 80 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.

பின்னர் அவருடன் இணைந்து வெங்கடேஷ் ஐயர் 113 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் பத்து சிக்ஸர்கள் உட்பட 151 ரன்கள் குவித்து மத்தியபிரதேச அணியை 300 ரன்களை கடக்க செய்தார்.50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மத்தியபிரதேச அணி 331 ரன்கள் குவித்தது. 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சட்டீஸ்கர் அணி அதனுடைய பேட்டிங்கை தொடங்கியது.

- Advertisement -

சட்டீஸ்கர் அணியின் கேப்டன் மன்னன் வோஹ்ரா அற்புதமாக விளையாடி 95 பந்துகளில் 105 ரன்கள் குவித்து மிகப்பெரிய அடித்தளத்தை சட்டீஸ்கர் அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். பின்னர் மிடில் ஆர்டர் வரிசையிலும் களமிறங்கி அங்கித் கௌசிக்கும் தன் பங்கிற்கு அற்புதமாக விளையாடி சதம் அடிக்க, ஒரு கட்டத்தில் சட்டீஸ்கர் அணி தான் இறுதியில் வெற்றி பெறும் என்கிற நிலையில் இருந்தது.

இருப்பினும் மத்திய பிரதேச அணியின் பந்துவீச்சாளர்கள் இறுதிவரை விடாப்பிடியாக சாமர்த்தியமாக பந்துவீசிய காரணத்தினால், 5 ரன்கள் வித்தியாசத்தில் சட்டீஸ்கர் அணி மத்தியபிரதேச அணியிடம் தோல்வி அடைந்தது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அசத்திய வெங்கடேஷ் ஐயர்

பேட்டிங்கில் 113 பந்துகளில் சரவெடியாக வெடித்து 151 ரன்கள் குவித்த அவர், பிற்பாதியில் பந்துவீச்சிலும் 10 ஓவர்கள் வீசி 64 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான அவர் தலைவர் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று சதம் அடித்து, அதை தலைவர் ரஜினிகாந்த் ஸ்டைலிலேயே கொண்டாடியிருக்கிறார்.

- Advertisement -

சதம் அடித்த அடுத்த நொடியே சூப்பர் ஸ்டார் போல சல்யூட் வைத்து, தலை முடியை கோதி, பின்னர் கூலிங் கிளாசை அவர் பாணியில் மாற்றுவது போல செய்கை செய்து உற்சாகமாக தன்னுடைய சதத்தை கொண்டாடினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.