கோலியால் சிவம் துபே ரிங்கு சிங்குக்கு பிரச்சனை.. இங்க பெரிய சவாலே இதுதான் – இர்பான் பதான் பேட்டி

0
104
Virat

நடப்பு ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு அணிகளை அறிவிப்பதற்கான கடைசி செய்தியாக மே ஒன்றாம் தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உலகக் கோப்பைக்கு இந்திய அணி தேர்வு பற்றி இர்ஃபான் பதான் பேசி இருக்கிறார்.

தற்பொழுது டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் துவக்க வீரர்களாக யார் இருப்பார்கள் என்பது, இந்திய அணி எப்படி அமையும் என்பதை முடிவு செய்யக் கூடியதாக இருக்கிறது. விராட் கோலி துவக்க வீரராக வந்தால் ஒரு மாதிரியான இந்திய அணியும், அவர் மூன்றாவது இடத்தில் வந்தால் ஒரு மாதிரியான இந்திய அணியும் அமையக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசும் பொழுது “என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருக்க வேண்டும். இவர்கள் இருவரும் இடது வலது காம்பினேஷன் தருவார்கள். மேலும் ஜெய்ஸ்வால் சர்வதேச ஸ்ட்ரைக் ரேட் 160. உங்களுக்கு தேவை பவர் பயர்.

விராட் கோலி ஓபனிங் செய்தால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் மிகவும் வேறு மாதிரி இருக்கும். அவர் துவக்க வீரராக வரும் பொழுது இந்திய அணியில் சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இடம் பெற முடியும். அப்பொழுது மற்ற விஷயங்கள் எதுவும் பெரிய சவாலாக இருக்காது.

அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக இடம் பெறுவதால், அவர் வலையில் தொடர்ந்து பந்து வீசக் கூடியவராக இருந்தால், அவரை ஆறாவது பந்துவீச்சாளராக பயன்படுத்த முடியும். மேலும் நீங்கள் ஐந்து சரியான பந்துவீச்சாளர்களை வைத்து செல்ல முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் கோலி இல்லை.. இவர்தான் இந்தியாவுக்கு டி20 உலக கோப்பை வாங்கி தருவார் – யுவராஜ் சிங் பேட்டி

அவரை தவிர்த்து நீங்கள் பேட்டிங் வரிசையில் டாப் 6 பார்த்தால் யாருமே பந்து வீசக்கூடியவர்களாக இல்லை. இந்த ஆறாவது பந்துவீச்சாளர் தான் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. மற்றபடி ரோகித் சர்மா, ஜெய்சுவால், விராட் கோலி மூவரும் முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்வார்கள்” என்று கூறி இருக்கிறார்.