பறவையாய் மாறிய ஸ்ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அபார கேட்ச் – வீடியோ இணைப்பு உள்ளே !

0
904
Tristan Stubbs

செளத்ஆப்பிரிக்கா அணி தலா மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகளென மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது!

இதில் முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் செளத்ஆப்பிரிக்கா அணி 62 ரன் வித்தியாசத்திலும், மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாவது ஆட்டத்தில் டக்வொர்த் லீவீஸ் விதியின்படி இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாத்திலும் வெற்றிபெற, கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட தொடர் 1-1 என சமன் ஆனது!

- Advertisement -

இதையடுத்து தொடங்கிய மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் செளத்ஆப்பிரிக்கா அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற தொடர் 1-1 சமன் ஆனது!

இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் கடைசி மூன்றாவது போட்டி நேற்று செளத்தாம்பனில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய செளத்ஆப்பிரிக்கா அணி துவக்க ஆட்டக்காரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ், நடுவரிசை ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம்மின் அதிரடி அரைசதத்தால் 191 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி செளத்ஆப்பிரிக்காவின் சிறப்பான பந்துவீச்சால் 101 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற செளத்ஆப்பிரிக்கா அணி 2-1 என டி20 தொடரைக் கைப்பற்றியது!

இந்த ஆட்டத்தின் போது இடக்கை மொயின் அலி ஆப்-ஸ்பின்னர் எய்டன் மார்க்கரம் வீசிய பந்தொன்றை, எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கியடித்து பவுண்டரி எடுக்க முயற்சா செய்ய, அடித்த ஷாட்டில் கொஞ்சம் நேரம் தவறி பந்து காற்றில் பறக்க, எக்ஸ்ட்ரா கவர் திசையில் பீல்டிங்கில் இருந்த இளம்வீரர் ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒருமாதிரி பக்கவாட்டு திசையில் பின்புறமாய் பாய்ந்து பறந்து அற்புதமாக கேட்ச் செய்தார். இதை ரீ-ப்ளேவில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது!

- Advertisement -