டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்கலனாலும்.. இந்திய அணிக்காக இதை செய்வேன் – சுப்மன் கில் பேட்டி

0
52
Gill

நடப்பு 17-வது ஐபிஎல் சீசன் பாதி நிலையைக் கடந்திருக்கிறது. இதன் காரணமாக அடுத்து நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை குறித்து நிறைய பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தனது வாய்ப்பு பற்றி சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

இந்த வருடம் ஜூன் ஒன்றாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான அணி அறிவிப்பிற்கு மே ஒன்றாம் தேதி கடைசி தேதியாக ஐசிசி கொடுத்திருக்கிறது. எனவே இந்த வாரத்தில் இந்திய அணி அறிவிப்புடன் சேர்ந்து மற்ற அணிகளின் அறிவிப்பு வரிசையாக வெளிவரும்.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் துவக்க வீரர்கள் இடத்தில் கேப்டன் ரோஹித் சர்மா நிச்சயம் இடம் பெறுவார். மேலும் இன்னொரு துவக்க வீரர் இடத்திற்கு ஜெய்ஸ்வால், கில், ருதுராஜ் ஆகிய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் மூத்த வீரரான விராட் கோலியை துவக்க வீரராக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எனவே அந்த ஒரு இடத்திற்கு மொத்தம் நான்கு வீரர்கள் போட்டியிட்டு வருகிறார்கள். மாற்று துவக்க ஆட்டக்காரருக்கான இடம், தேர்வு செய்யப்படும் இரண்டு விக்கெட் கீப்பர்களில் ஒருவருக்கு கொடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே மாற்றுத் துவக்க ஆட்டக்காரராகவும் இந்திய அணியில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

தற்பொழுது இதுகுறித்து சுப்மன் கில் மனம் திறந்து பேசி இருக்கிறார். கூறும்பொழுது “டி20 உலகக்கோப்பையில் நான் தேர்வு செய்யப்படுவேனா என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் எனது அணி உரிமையாளரால் எனக்கு ஒரு குறிப்பிட்ட பங்கும் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இப்போது எனது முன்னுரிமை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அணியின் வீரர்களுக்கானதுதான். ஒரு வீரராக என்னுடைய அணிக்கு ரன் குவிப்பதை பற்றி மட்டுமே யோசித்து வருகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ மஞ்ச்ரேக்கரின் இந்திய அணி.. கோலி ஹர்திக் ரிங்கு இடமில்லை.. புதிய வீரர்களுடன் புது அணி

ஒரு வீரராக இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன். உலகக்கோப்பையில் விளையாடும் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். உலகக்கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எப்பொழுதும் ஒரு கனவாகும். நான் இந்த முறை டி20 உலகக்கோப்பை தேர்வு செய்யப்படாவிட்டாலும் கூட, நான் இந்திய அணி வெல்வதற்காக இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவேன்” என்று கூறியிருக்கிறார்.