துல்லியமாக டி.ஆர்.எஸ் பயன்படுத்திய கேப்டன் ரோஹித் ஷர்மா ; டி.ஆர்.எஸ் முடிவுக்கு முன் பண்ட & கோலியுடன் உரையாடல் – வீடியோ இணைப்பு

0
1324
Rohit Sharma DRS Review Conversation

இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய அணியின் 1000 ஆவது ஒரு நாள் போட்டி இதுவென்பது கூடுதல் சிறப்பு. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 43.5 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹோல்டர் 57 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய சஹால் 4 விக்கெட்டுகள் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

மூன்று முறை டிஆர்எஸ் எடுத்து மூன்று முறையும் வெற்றி கண்ட ரோஹித் ஷர்மா

ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 11.2 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்து இருந்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் டேரன் பிராவோ எல்பிடபிள்யூ முறைப்படி அவுட்டானார். கள நடுவர் முதலில் அவுட் கொடுக்கவில்லை, பின்னர் ரோஹித் டிஆர்எஸ் விதி முறையை பயன்படுத்தினார். அதில் தெள்ளத்தெளிவாக அவர் எல்பிடபிள்யூ முறைப்படி அவுட்டானது தெரியவந்தது.

பின்னர் 20வது ஓவரின் 3-வது பந்தில் சஹால் பந்துவீச்சில் நிக்கோலஸ் பூரன் எல்பிடபிள்யூ விதிமுறைப்படி அவுட்டானார். இந்த முறையும் கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பின்னர் கேப்டன் ரோஹித் டிஆர்எஸ் விதி முறையை பயன்படுத்தி நிக்கோலஸ் பூரன் அவுட் ஆனதை உறுதிப்படுத்தினார்.

- Advertisement -

22வது ஓவரின் 5வது பந்தில் ப்ரூக்ஸ் அவுட்டானார். சஹால் வீசிய அந்த பந்து ப்ரூக்ஸ் பேட்டில் லேசாக உரசி சென்றது. அந்த பந்தை லாவகமாக விக்கெட் கீப்பர் பண்ட் கேட்ச் பிடித்தார். இந்த முறையும் கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

பின்னர் சஹால் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து நிச்சயமாக பந்து பேட்டில் பட்டது என்று ரோஹித் ஷர்மாவிடம் வலியுறுத்தினார். அவர்கள் மீது நம்பிக்கை வைத்து ரோஹித் ஷர்மா டிஆர்எஸ் விதி முறையை பயன்படுத்தினார். மறு ஆய்வில் பந்து பேட்டில் பட்டது உறுதியாக, ப்ரூக்ஸ் அவுட் கொடுக்கப்பட்டார். ரோஹித், கோலி மற்றும் சஹால் உரையாடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இனி நிச்சயமாக டிஆரஎஸ்’சை ரோஹித் விதிமுறை என்று கூற வேண்டும்

எம்எஸ் தோனி விக்கெட் கீப்பராக இருந்தவரையில் அவர் எடுக்கும் அல்லது பரிந்துரைக்கும் டிஆர்எஸ் முடிவுகள் மிகத் துல்லியமாக இருக்கும். அவர் கையை உயர்த்தி டிஆர்எஸ் விதிமுறையை பயன்படுத்தினாலே கிட்டத்தட்ட அது வெற்றிகரமாக தான் இருக்கப் போகிறது என்கிற எண்ணத்தை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தி விடுவார்.

இன்று ரோஹித் ஷர்மா எம்எஸ் தோனியைப் போல டிஆர்எஸ் விதிமுறையை கனகச்சிதமாக பயன்படுத்தி வெற்றி கண்டதை மேற்கோள் காட்டி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் “முன்பு எப்படி நாம் தோனி ரிவ்யூ சிஸ்டம் ( டிஆர்எஸ் ) என்று அழைப்போமோ, அதேபோல தற்பொழுது டெஃபனைடட்லி ரோஹித் சிஸ்டம் ( டிஆர்எஸ் ) என்று அழைக்கலாம். அவரது முடிவுகள் துல்லியமாக இருக்கிறது என்று கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -