இந்தியா – தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, கேப்டன் விராட் கோஹ்லி உதவியால் 223 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்கா 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72, பவுமா 28, வென்டர் டசன் 21 ரன்கள் அடித்தனர். 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
வழக்கம் போல தொடக்க வீரர்கள், புஜாரா, ரஹானே சொற்ப ரன்னில் வெளியேறினர். கேப்டன் விராட் கோஹ்லி மிகவும் நிதானமாக ஆடி 143 பந்தில் 29 ரன்கள் சேர்த்து இங்கிடி பவுலிங்கில் விக்கெட்டை இழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் இந்திய விக்கெட் கீப்பர் பண்ட், நிலைத்து ஆடி அணியை மீட்டார். விக்கெட்டுகள் மல மலவென சரியத் தொடங்கியதால், ரிஷப் பண்ட் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடத் தொடங்கினார். பவுண்டரியும் சிக்ஸரும் விளாசிக் கொண்டிருந்த போது நடுவில் ஒலிவியர் வீசிய பந்தை பாய்ண்ட் திசையில் அடிக்க முயன்றார்.
அப்போது பேட் அவரின் கையை விட்டு நழுவிச் சென்றது. பந்து எங்கு சென்றதென்று பார்வையாளர்களுக்கு புரியவில்லை. அப்பந்தை மறு ஒளிபரப்பு செய்த பின்தான் பவுண்டரி எல்லைக்கு வெளியில் இருப்பதை தொலைக்காட்சி பார்வையாளர்கள் உணர்ந்தனர். பறந்து விழுந்த பேட்டை எடுத்து தொட்டுக் கும்பிட்டார். புத்தகங்களை அறியாமல் மெரித்துவிட்டு பின்னர் தொட்டுக் கும்பிடுவது போல் செய்தார். தனக்கு உபயோகமான பொருளுக்கு ரிஷப் பண்ட் மரியாதை செலுத்துவதை கண்டு ரசிகர்கள் பெருமையாக பேசினர்.
Biggest #Cricket Entertainer of The World 😂, Freak Rishabh Pant 😜, World Cricket Need Character Like
— Prateek (@cricket_buddy1) January 13, 2022
Rishabh Pant 😜 #SAvIND pic.twitter.com/BYj9hF1vpi
அதிரடியாக ஆடிய பண்ட் தென்னாபிரிக்கா மண்ணில் தன் முதல் சதத்தைப் பதிவு செய்தார். ஆட்டமிழக்காமல் 100 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தென்னாபிரிக்கா அணிக்கு 212 ரன்கள் இலக்கை நிர்ணயித்து இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்விலக்கை அடையவிடாமல் செய்து முதல் முறையாக தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் நோக்கில் கோஹ்லி & கோ களமிறங்கியுள்ளது.