இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வென்று விட்டால் முதன்முறையாக தென் ஆப்பிரிக்க நாட்டில் தொடரை வெல்லலாம் என்பதால் இந்திய அணி சிறப்பாக உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. வழக்கமான இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் கோலி காயத்தால் இந்த போட்டியில் பங்கேற்காத காரணத்தினால் கேஎல் ராகுல் தற்போது கேப்டனாக செயல்படுகிறார். முதல் இன்னிங்சில் கேப்டன் ராகுல் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பதிலுக்கு தன்னுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்க அணி ஷர்தூல் தாகூரின் வேகத்தில் வீழ்ந்து 229 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரகானே அதிரடியாக நின்று விளையாடி அரைசதம் அடித்தனர். இதுபோன்ற ஆடு களத்தில் நிலைத்து நின்று விளையாடினால் வேலைக்கு ஆகாது என்று சீனியர் வீரர்கள் இருவரும் அதிரடியாக விளையாடினர். அவர்கள் அவுட் ஆன பிறகு களத்திற்குள் வந்த ரிஷப் பண்ட் தன்னுடைய வழக்கமான அதிரடியை காண்பிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதுவும் வந்தவுடன் தென் ஆப்பிரிக்க அணியின் வண்டர்டுசனை வம்பு இழுக்கவும் செய்தார் ரிஷப் பண்ட்.
— Lodu_Lalit (@LoduLal02410635) January 5, 2022
அருகில் நின்று கொண்டிருந்த வாண்டர்டுசனைப் பார்த்து ஒரு விஷயம் முழுமையாக தெரியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டிரு என்று கூறினார் பண்ட். ஆனால் இப்படி பேசி முடித்த அடுத்த பந்தே மோசமான ஷாட் ஒன்று விளையாடி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பண்ட்.
இதனால் விரக்தி அடைந்த பண்ட் ஆட்டமிழந்து வெளியேறும்போது கோவமாக சென்றார். இதனால் ரிஷப் பண்ட்டிற்கு வரிசையாக அதிக வாய்ப்புகள் கொடுத்து விட்டதால் வேறு விக்கெட் கீப்பர் டெஸ்ட் போட்டிகளுக்கு முயற்சி செய்து பார்க்கலாம் என்று ரசிகர்கள் கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.