ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாத்துங்க.. உலக சாதனை ரன் சேஸ் – அஸ்வின் வெளியிட்ட பதிவு

0
3942
Ashwin

இன்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் அணி ரன் சேஸ் செய்வதில் உலக சாதனை படைத்து வெற்றி இருக்கிறது. இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் அர்த்தத்தோடும் பதிவு செய்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 32 பந்துகளில் சுனில் நரைன் 71 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 37 பந்தில் 75 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 261 ரன்களை ஆறு விக்கெட் இழப்புக்கு எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்த இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு பிர்ப் சிம்ரன் சிங் 20 பந்தில் 54 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 48 பந்தில் 108 ரன்கள், ஷஷாங்க் சிங் 28 பந்தில் 68 ரன்கள் எடுக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி ரன் சேஸ் செய்வதில் உலக சாதனை படைத்து 18.4 ஓவரில் இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் இதுவரையில் மொத்தம் ஏழு முறை 260க்கும் மேல் ரன்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இதற்கு முன்பு மொத்தம் மூன்று முறை மட்டுமே ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு ரன்கள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை ரன் மழை பெய்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கின்ற காரணத்தினாலும், ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு மிக சாதகமாக உருவாக்கப்படுவதாலும், பந்துவீச்சாளர்களுக்கு போட்டியில் எந்த வாய்ப்புமே இல்லாமல் போய்விடுகிறது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் மைதானம் எங்கும் பந்துவீச்சை நொறுக்கி தள்ளுகிறார்கள்.

இதையும் படிங்க : எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் – ஜானி பேர்ஸ்டோ பேட்டி

இன்றைய போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் “தயவுசெய்து யாராவது பந்துவீச்சாளர்களை காப்பாற்றுங்கள். 260 ரன்களை துரத்தும் ஒரு போட்டியில், இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் பொழுதே, பந்துக்கு பந்து ரன் தேவை என்ற நிலை வந்திருக்கிறது. இதில் கிரிக்கெட் வர்ணனையாளர் கொல்கத்தா மைதானத்தின் சராசரியான பவுண்டரி நீளம் இதுதான் என்கிறார்” என்று நகைச்சுவையாக கூறுவது போல வருத்தமாக பதிவு செய்திருக்கிறார். பிசிசிஐ இதற்கு என்ன மாதிரியான தீர்வு காண போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -