ஓய்வு பெறும் முடிவில் இருந்து மீண்டு வந்து முதல் போட்டியிலேயே கோலி, ரோஹித், பண்ட் என 3 பெரிய விக்கெட்டுகளை எடுத்துள்ள கிலீசன் – வீடியோ இணைப்பு

0
176
Richard Gleeson

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் தோற்றது. இதற்கடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், செளதாம்டனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி வெற்றது!

இதையடுத்து தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. இஷான் கிஷான், தீபக் ஹூடா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு, ரிஷாப் பண்ட், விராட்கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீட் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து தரப்பில் ரிச்சர்ட் கிளெஸ்ஸன் என்ற வேகப்பந்து வீச்சாளர் டாப் சிப்லிக்குப் பதில் இடம்பெற்றார்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தில் தரப்பில் அறிமுகம் ஆன ரிச்சர்ட் கிளெஸ்ஸனின் வயது 34 வயது 219 நாட்கள் ஆகும். அதிக வயதில் அறிமுகமான மூன்றாவது வீரர் இவர் ஆவார். இங்கிலாந்து கவுண்டி அணிகளான நாட்டிஹாம்சைர், லங்காசைர் அணிகளுக்காக விளையாடிய இவர், ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் டி20 லீக்கில் மெல்போர்ன் அணிக்காக விளையாடி உள்ளார்.

இந்திய அணியில் அதிரடி மாற்றமாக ரோகித் சர்மாவோடு ரிஷாப் பண்ட் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 49 ரன்களை இந்த துவக்க ஜோடி எடுத்திருக்க, ரோகித் சர்மாவை டாப்-எட்ஜ் எடுக்க வைத்து பட்லர் மூலம் வெளியேற்றினார் அறிமுக வீரர் ரிச்சர்ட் கிளெஸ்ஸன். மீண்டும் அடுத்த தனது ஓவரில் விராட் கோலியை வீழ்த்தி, அதற்கடுத்த பந்தில் ரிஷாப் பண்ட்டையும் வீழ்த்தி இந்திய அணிக்குப் பெரிய நெருக்கடியை உருவாக்கி விட்டார். இவர் நவம்பர் 2021ஆம் ஆண்டு காயத்தால் ஓய்வை அறிவித்து, பின் மீண்டும் வந்து சாதித்திருக்கிறார்.

நல்ல துவக்கத்தைப் பெற்ற இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தாலும், இருபது ஓவர்களின் முடிவில் இந்திய அணி 170 ரன்கள் எடுத்திருக்கிறது. ரவீந்திர ஜடேஜா 29 பந்தில் 46 ரன்கள் அடித்தார். கிறிஸ் ஜோர்டான் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்!

- Advertisement -