மைதானத்திற்கு வெளியே இமாலய சிக்ஸர் அடித்த டேவிட் மலான் ; புதருக்குள் சென்று பந்தைத் தேடி அலைந்த நெதர்லாந்து வீரர்கள் – வீடியோ இணைப்பு

0
243
Ball missing after david malan six

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக, இயான் மோர்கன் தலைமையில் நெதர்லாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இங்கிலாந்தின் இன்னொரு அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணியோடு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது!

இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று ஆம்ஸ்டெல்வீன் நகரின் வி.ஆர்.ஏ மைதானத்தில் துவங்கியது. முதலில் டாஸில் வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் சீலர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களம் புகுந்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்காக பேட்டிங்கை துவங்க ஜேசன் ராய், பில் சால்ட் ஜோடியில் ஜேசன் ராயை ஆரம்பத்திலேயே ஒரு ரன்னில் அவுட் செய்து நெதர்லாந்து அணியினர் அனுப்பி வைத்தனர். ஆனால் இதற்குப் பிறகு இந்த ஆட்டத்தில் அவர்கள் மகிழ எந்தவொரு பெரிய சந்தர்ப்பமும் அமையவே இல்லை. இதற்கடுத்து வந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நெதர்லாந்து பந்துவீச்சாளர்களை அதிரடி பேட்டிங்கில் வதைத்தெடுத்து விட்டனர்.

ஜேசன் ராய் வெளியேறியதும் ஜோடி சேர்ந்த டேவிட் மலான், பில் சால்ட் ஜோடி கூட்டாக இணைந்து 222 ரன்களை குவித்தனர். இதில் ஆரம்பத்தில் டேவிட் மலான் அடித்த ஒரு இமாலய சிக்ஸர் மைதானத்திற்கு வெளிய போய் புதருக்குள் விழ, அதைத் தேடி எடுத்து வரும் நிலை ஏற்பட்டது.

பில்ட் சால்ட் 93 பந்துகளில் 122 ரன்கள் அடித்து வெளியேற, அடுத்து வந்த ஜோஸ் பட்லர் அசுரத்தனமான பேட்டிங் தாக்குதலில் இறங்கினார். டேவிட் மலான், ஜோஸ் பட்லர் ஜோடி 184 ரன் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். டேவிட் மலான் 109 பந்துகளில் 125 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் வெறும் 41 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதற்கடுத்து வந்த கேப்டன் இயான் மோர்கன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன், இயான் மோர்கனை அவுட் செய்தது தவறு என்று நெகர்லாந்து அணியினரை நினைக்க வைத்துவிட்டார்.

- Advertisement -

ஆட்டத்தின் இறுதிக்கட்ட தாக்குதலில் கைக்கோர்த்த ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் ஜோடி சரவெடியாய் வெடிக்க ஸ்கோர் அசுர வேகத்தில் எகிறத் தொடங்கியது. ஜாஸ் பட்லர் 150 ரன்களை கடக்க, இன்னொரு புறத்தில் லிவிங்ஸ்டன் வெறும் 17 பந்துகளில் ஐந்து பவுண்டரி, ஐந்து சிக்ஸர்களோடு அரைசதத்தைக் கடந்தார். 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து நான்கு விக்கெட் இழப்பிற்கு 498 ரன்களை குவித்து உலகச் சாதனை படைத்தது. இதற்குமுன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 481 ரன்களை குவித்து உலகச்சாதனை படைத்திருந்த இங்கிலாந்து அணி, இந்த முறை தன் சாதனையை தானே உடைத்துக் கொண்டுள்ளது!