கடைசி 2 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அபார சிக்ஸர் அடித்த லோக்கி பெர்குசன் – விறுவிறுப்பான வீடியோ இணைப்பு

0
361
Lockie Ferguson Six in Super Smash Leauge

இந்த ஆண்டிற்கான சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடர் இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் டி20 தொடர்கள் நடைபெறுவது போல் நியூசிலாந்தில் நடைபெறும் ஒரு டி20 தொடராகும். இந்தத் தொடரில் மொத்தமாக 6 அணிகள் ( ஒடாகோ வோல்ட்ஸ் , நார்தர்ன் கினைட்ஸ், கேன்டர்புரி கிங்ஸ்,ஆக்லாந்து அசெஸ், சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் ) பங்கேற்று விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் மற்றும் ஆக்லாந்து அசெஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரெக் ஹே 57 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ஆக்லாந்து அணி

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆக்லாந்து அணி விளையாடத் தொடங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் மார்டின் குப்டில் துவக்கம் முதலே மிக அற்புதமாக விளையாடினார். ஆனால் மறுபக்கம் அவருடன் இணைந்து விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், குப்டில் உடன் இணைந்த கேப்டன் ராபர்ட் நிதானமாக விளையாட தொடங்கினார். இவர்கள் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். 15வது ஓவரின் முடிவில் ராபர்ட் அவுட் ஆகி விட, கடைசி 5 ஓவரில் அந்த அணி வெற்றி பெற மேலும் 65 ரன்கள் தேவைப்பட்டது.

ஆக்லாந்து அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பென் ஹார்நே இறுதி நேரத்தில் 9 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 27 ரன்கள் குவித்து, அணி வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவரும் தனது விக்கெட்டை பறிகுடுத்தார்.

- Advertisement -

இறுதி ஓவரில் மார்டின் குப்டில் மற்றும் லோக்கி பெர்குசன் களத்தில் நின்றனர். முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டும் வந்த நிலையில், அணி வெற்றி பெற கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை லோக்கி பெர்குசன் அதை சிக்ஸராக தூக்கி அடிக்க ஆக்லாந்து அணி இறுதியில் திரில் வெற்றி பெற்றது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் மார்டின் குப்டில் 58 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 79 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.