கோலி 2 சிக்ஸ்.. துஷாரை டோஸ் விட்டு.. கண்ணாலே திட்டத்தை மாற்றிய தோனி.. உடனே கிடைத்த ரிசல்ட்

0
347
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ளும் மிக மிக முக்கியமான போட்டி தற்பொழுது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி துஷார் தேஷ்பாண்டேவுக்கு மாற்றிய திட்டம் ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சிஎஸ்கே அணியில் மொயின் அலி இடத்தில் சான்ட்னர் இடம் பெற்றார். மேலும் சமீர் ரிஸ்வி வெளியே வைக்கப்பட்டு ரகானேவுக்கு இடம் கொடுக்கப்பட்டது. ஆர் சி பி அணியில் வில் ஜேக்ஸ் இடத்தில் மேக்ஸ்வெல் இடம் பெற்றார்.

- Advertisement -

ஆர்சிபி அணிக்கு பேட்டிங்கில் துவக்கம் கொடுப்பதற்கு கேப்டன் பாப் டு பிளேசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே இருவருக்கும் தலா ஒரு ரன்கள் மட்டுமே கொடுத்தார். முதல் ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே வந்தது.

இதற்கு அடுத்து சர்துல் தாக்கூர் வீசிய இரண்டாவது ஓவரில் விராட் கோலி ஒரு பவுண்டர் அடிக்க, பாப் டு பிளேசிஸ் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். இரண்டாவது ஓவரில் ஆர்சிபி அணிக்கு 16 ரன்கள் வந்தது. இரண்டு ஓவர் முடிவில் அந்த அணி 18 ரன்கள் எடுத்தது.

மீண்டும் மூன்றாவது ஓவரை வீச துஷார் தேஷ்பாண்டே வந்தார். விராட் கோலி வழக்கம் போல் வேகப்பந்து வீச்சில் இறங்கி வந்து விளையாடும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் காரணமாக துஷார் தேஸ்பாண்டே பந்தை ஷார்ட் ஆக வீச, அதை எதிர்பார்த்த விராட் கோலி இரண்டு மெகா சிக்ஸர்களை பார்க்க விட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியை பத்தி ஒரு விஷயம் 6 வருஷமா பேசறாங்க.. ஆனா எதுவுமே மாறல – பாப் டு பிளேசிஸ் பேட்டி

முதல் சிக்ஸருக்கு அமைதியாக இருந்த தோனி, இரண்டாவது சிக்சரை விராட் கோலி அடிக்கவும், துஷார் தேஷ்பாண்டேவை பார்த்து கோபமாக, விராட் கோலி இறங்கி வந்தாலும் பந்தை மேல் நோக்கியே வீசு என்று சிக்னல் செய்தார். ஏற்கனவே அணியில் இந்த திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது போல. தோனி கோபமாக சொல்ல, அடுத்து துஷார் தேஸ்பாண்டே பந்தை அவர் வழக்கமாக வீசும் லென்த்தில் வீசினார். இதற்கு அடுத்து விராட் கோலி ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்டெம்புக்கு பின்னால் தோனி ஏன் அவசிய தேவை என மூன்றாவது ஓவரிலேயே காட்டினார். தற்பொழுது இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.