டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு அமீரகத்தின் அபுதாபி மைதானத்தில் தற்போது டி10 லீக் தொடர் நடந்து வருகிறது. இதில் டெல்லி சென்னை உட்பட மொத்தம் 6 அணிகள் பங்கேற்று வருகின்றன. இதில் நேற்று அபுதாபி மற்றும் நார்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின. டி20 போட்டிகளுக்கு இத்தனை ரசிகர்கள் வர காரணமான கிறிஸ் கெய்ல் அபுதாபி அணி சார்பாக களம் கண்டார். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட கையில் அதிக நேரம் கழித்து நிற்காமல் 8 பந்துகள் பிடித்து 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இருந்தாலும் அபுதாபி அணிக்காக விளையாடிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லிவிங்ஸ்டன் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அதன் காரணமாக அபுதாபி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டம் முடிந்து சில நிமிடங்களிலேயே அடுத்த ஆட்டம் நடைபெற இருந்தது. அந்த ஆட்டத்தில் பங்களா டைகர்ஸ் மற்றும் டெல்லி புல்ஸ் அணிகள் மோத இருந்தன. இதில் டெல்லி அணிக்கு பிராவோ கேப்டனாகவும் பங்களா அணிக்கு டுப்லஸ்ஸிஸ் கேப்டனாகவும் இருந்தனர்.
அடுத்த ஆட்டத்திற்கு இந்த இருவரும் டாஸ் போடுவதற்காக களத்திற்குள் வந்ததும், அவர்களோடு முந்தைய ஆட்டத்தில் விளையாடிய கெயிலும் இணைந்து கொண்டார். இந்த இருவருக்கும் இடையில் இணைந்து கொண்டு நடுவருக்கு பதிலாக கெயில் டாஸ் போட்டார். அந்த டாஸ் பிராவோவுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் மறுபடியும் டாஸ் போட வேண்டும் என்று டுப்லஸ்ஸிஸ் கூறினார்.
— Sunaina Gosh (@Sunainagosh7) November 20, 2021
ஐபிஎல் தொடரில் பிராவோ மற்றும் டுப்லஸ்ஸிஸ் இருவரும் இணைந்து சென்னை அணிக்காக விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே சமீபத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் வெவ்வேறு அணிக்கு கேப்டனாக இருந்தாலும் ஒரு முறை இணைந்து நாங்கள் சென்னை பாய்ஸ் என்ற பாடலை சேர்ந்து பாடினார். அதனால் இந்த இருவரின் நட்பு பலருக்கும் தெரிந்ததுதான். இவர்களுக்கு இடையில் t20 ஜாம்பவான் கிரிஸ் கெயிலும் இணைந்து கொண்டது தான் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.