இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டியில் பிரண்டன் மெக்கலமின் புதிய இங்கிலாந்து அணி அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றிப் பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. அடுத்தப்படியாக இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் மோதுகிறது. முதல் போட்டி இன்று ( ஜூலை 7 ) இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. 5 பவுண்டரிகள் விளாசி சிறப்பான தொடக்கத்தை கொடுத்த அவர் அதைப் பெரிய ஸ்கோராக மாற்றவில்லை. 24 ரன்னில் மொயின் அலியிடம் வீழ்ந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 8 ரன்னில் வெளியேறினார். தீபக் ஹூடா – சூர்யகுமார் யாதவ் ஜோடி விக்கெட் வீழ்ந்திருந்தளும் அதிரடியான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 17 பந்தில் 33 ரன்கள் சேர்தப் பின்னர் ஹூடா பெவிலியன் திரும்பினார். அடுத்து ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து சூர்யகுமார் யாதவ் தன் வேலையை சிறப்பாகச் செய்தார்.
19 பந்தில் 39 ரன்கள் அடித்தப் பின் கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு ஆட்டமிழந்தார். நிலைத்து ஆடிய ஹர்திக் பாண்டியா அரை சதம் கடந்தார். உடனே பெரிய ஷாட் அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். பினிஷர் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த மறுபந்தே தூக்கி அடித்து கேட்ச் அவுட்டானார். கடைசியில் இந்திய அணி 198/8 என்ற பெரிய ஸ்கோரில் முடியாது. இங்கிலாந்து அணி தரப்பில் இரு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மொயின் அலி மற்றும் ஜோர்டன் 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தனர். மேலும், டாப்லி, மில்ஸ் மற்றும் பார்க்கின்சன் ஆளுக்கொரு 1 விக்கெட் கைப்பற்றினர்.
199 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஜேசன் ராய்யும் கேப்டன் ஜாஸ் பட்லரும் களமிறங்கினார். இங்கிலாந்து அணியின் கடப்பாரை பேட்டிங்க்கு இந்த இலக்கு எல்லாம் கால் தூசுக்கு சமம். ஆனால் அவர்களுக்கு ஆரம்பத்திலேயே பெரிய அதிர்ச்சி. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் ஸ்விங்கில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார் கேட்டேன் ஜாஸ் பட்லர். புதிய பந்தை புவனேஷ்வர் குமாரிடம் கொடுத்தால் அவர் மாயாஜாலம் செய்வார். பந்தை இரண்டு பக்கங்களும் மாறி மாறி ஸ்விங் செய்து பேட்ஸ்மேனை அச்சுறுத்துவார். ஜாஸ் பட்லர் துவக்க ஆட்டக்காரராக இருமுறை மட்டுமே டக் அவுட் ஆகியுள்ளார். அந்த இரண்டும் புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கில் தான்.
BOWLED!
— Doordarshan Sports (@ddsportschannel) July 7, 2022
Bhuvneshwar Kumar gets the big wicket, Jos Buttler gone for duck 🙌 #ENGvIND pic.twitter.com/NClQLHXFgp