கேட்ச் பிடிக்க சென்ற போது படக் கூடாத இடத்தில் பட்ட ஸ்டெம்பின் பெயில்ஸ் ; பதறிய டேவிட் வார்னர் – வீடியோ இணைப்பு

0
74
Bails hit david warner nuts

ஆஸ்திரேலியா அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு இந்த தொடர் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி மிகவும் எளிதாக கைப்பற்றினாலும் மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் சனாகா மிகச் சிறப்பான இன்னிங்ஸ் ஒன்று ஆடி இலங்கை அணிக்கு வெற்றி பெற்று தந்தார். இது வெறும் ஒரு போட்டிக்கு அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணமாக ஒரு நாள் தொடரிலும் இலங்கை சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி காட்டியது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை 3 போட்டிகளில் வென்று பலமான ஆஸ்திரேலிய அணியை சாய்த்தது.

இந்த இரண்டு தொடர்களையும் விட பல கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தது டெஸ்ட் தொடரை தான். காரணம் ஆஸ்திரேலியா ஆசிய கண்டத்தில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக தோல்விகளை சந்திப்பது வழக்கம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை எந்த மாதிரி வியூகத்துடன் களம் காணப் போகிறது என்பதைக் காணா பல கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்தனர். இரண்டு நாட்கள் முன்பு தொடங்கிய இந்தத் தொடரில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

சுழற்பந்துக்கு சாதகமாக மைதானம் அமைக்கப்பட அந்த வலையில் இலங்கையே சிக்கியது. ஆஸ்திரேலியா அணியின் சுழற்பகுதி சார்ந்த லயன் மற்றும் ஸ்வெப்சன் இணைந்து எட்டு விக்கெட்டுகளை முதல் இன்னிங்ஸில் இலங்கையிடம் இருந்து எடுத்தனர். இலங்கையால் முதல் இன்னிங்சில் 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதன் பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா மற்றும் கிரீன் இருவரும் அரை சதம் அடித்து 321 ரன்கள் எடுக்க துணை புரிந்தனர்.

நூறு ரன்களுக்கு மேல் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் அதிரடியாக ஆரம்பித்தது இலங்கை அணி. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் மட்டும் 17 ரன்கள் பறந்தன. ஆனால் அதன் பின்பும் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்திற்குள் வர மீண்டும் மடமட என இலங்கை விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் குறிப்பாக பகுதி நேர சுடர்ந்துவீச்சாளர் டிராவிஸ் ஹெட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒன்பதாவது விக்கெட்டை வீழ்த்த ஹெட் வீசிய பந்தை இலங்கையின் வாண்டர்சே சரியாக கணிக்காமல் விட அது நேராக சென்று ஸ்டம்ப்பில் பட்டது. பட்டவுடன் பெயில்ஸ் பறந்து சென்று லெக் ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த வார்னரின் அடிவயிற்றில் மோதியது. படக்கூடாத இடத்தில் பட்டதும் சிறிது நேரம் வார்னர் வலியால் அவதிப்பட்டார். மற்ற வீரர்கள் எல்லாம் விக்கெட் விழுந்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்தபோது வார்னருக்கு மட்டும் இப்படி ஒரு அவல நிலையா என்று ரசிகர்கள் நகைச்சுவையுடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -