ஏபி டிவிலியர்ஸின் ஓய்வை டிவிட்டரில் கேலி செய்த பர்விந்தர் அவானா – உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்

0
178

தென் ஆப்பிரிக்க அணி கிரிக்கெட் வீரர்களில் தவிர்க்க முடியாத ஒரு பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ். தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் தென்னாபிரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென அதிக ரசிகர்களை சம்பாதித்த ஒரு பேட்ஸ்மேன்.முக்கியமாக இந்தியாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 2011 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை மொத்தமாக பதினொரு ஆண்டுகள் விளையாடியிருக்கிறார்.

பல லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் சொந்தமான அவர் இன்று தனது முழு நேர ஓய்வு அறிவிப்பை தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து அனைத்து வகை கிரிக்கெட் பார்மெட்டிலும் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் கடந்த மூன்று வருடங்களில் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

- Advertisement -

ஏபி டிவிலியர்ஸ்ஸை கலாய்த்த வேகப்பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானா

ஒருபக்கம் பல்வேறு ரசிகர்கள் அவருடைய ஓய்வு அறிவிப்புக்கு வருத்தம் தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பர்விந்தர் அவானா அவரை தனது ட்விட்டர் வலைதளத்தில் ஒரு வீடியோ மூலம் கலாய்த்துள்ளார். 2013ஆம் ஆண்டு ஏபி டிவில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய சமயத்தில், பர்விந்தர் அவானா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடினார். அந்த ஆண்டு இந்த இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒரு போட்டியில், ஏபி டிவிலியர்ஸ் விக்கெட்டை பர்விந்தர் அவானா தனது பந்துவீச்சின் மூலம் கைப்பற்றியிருக்கிறார்.

19வது ஓவரில் பர்விந்தர் அவானா வீசிய பந்தில் ஏபி டிவிலியர்ஸ் கிளீன் போல்ட் ஆகும் அந்த வீடியோவை பதிவிட்டு, “கிரிக்கெட்டுக்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி”என்று நக்கல் தொனியில் ஏபி டிவிலியர்ஸ்ஸை கலாய்த்திருக்கிறார். அவரது இந்த பதிவிற்கு கீழ் பல்வேறு ரசிகர்கள் தங்களுடைய கண்டிப்பை தெரிவித்து வருகின்றனர். மறுப்பக்கம் பர்விந்தர் அவானாவை ஒரு சில ரசிகர்கள் பதிலுக்கு கலாய்த்து வருகின்றனர்.