ஷர்துல் தாகூரை புறக்கணித்து ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ள வாசிம் ஜாபர் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்

0
254

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கின்றது. அதன் பின்னர் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே டி20 தொடர் விளையாட இருக்கின்றது.

அதன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டி 20 தொடரும், இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் முடித்த பின்னர் இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை டி20 தொடரில் பங்கேற்று விளையாடும்.

- Advertisement -

சர்வதேச அளவில் இந்திய அணி வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொருத்து ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை டி20 தொடருக்கான அணி தேர்ந்தெடுப்பு நடைபெறும் என்பது நமக்கு தெரியும். இந்நிலையில் தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை டி20 தொடருக்கான சிறந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை டி20 தொடருக்கான வாசிம் ஜாபர் தேர்ந்தெடுத்துள்ள இந்திய அணி :

ரோஹித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை ஓபனிங் வீரர்களாக தேர்வு செய்துள்ளார். 2வது இடத்தில் எப்பொழுதும் போல விராட் கோலி அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

ஆல்ரவுண்டர் வீரர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்துள்ளார் பந்துவீச்சாளர்களாக ஹர்ஷால் பட்டேல், புவனேஸ்வர் குமார், சஹால் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

முழு அணியில் பந்துவீச்சாளர்கள் மத்தியில் முகமது ஷமி மற்றும் தீபக் சஹர் ஆகியோருக்கு போட்டியிடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். தீபக் சஹர் முழு உடற்தகுதியுடன் திரும்பும் பட்சத்தில் அவர் நிச்சயமாக அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கேஎல் ராகுல், ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, ருதுராஜ் கெய்க்வாட், தினேஷ் கார்த்திக் அல்லது சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், முகமது ஷமி அல்லது தீபக் சஹர்.

பேக்கப் வீரர்கள் : ராகுல் டிருப்பதி, தங்கராசு நடராஜன் மற்றும் பிரித்வி ஷா

வாசிம் ஜாபர் தேர்ந்தெடுத்துள்ள வீரர்கள் பட்டியலில் ஷர்துல் தாகூர் பெயர் இடம்பெறவில்லை. பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடக் கூடியவரான தாகூரை ஜாபர் தேர்ந்தெடுக்காதது ரசிகர்கள் ஒரு சிலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.