டி20 உலகக் கோப்பை 2024

இந்திய டீம் இந்த ரெண்டு பேர்கிட்ட சிக்கிடுச்சு.. ரிஷப் பண்ட் சூர்யாவை சிக்கல்ல விடாதிங்க – வாசிம் ஜாபர் கோரிக்கை

நடப்பு டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இருபதாம் தேதி விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இந்திய அணி நிர்வாகத்திற்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.

- Advertisement -

தற்போதைய டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி நிர்வாகம் எதிர்பார்க்காத இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தது. குல்தீப் யாதவை வெளியில் வைத்து ரவீந்திர ஜடேஜா உடன் அக்சர் படேலை விளையாட வைத்தது. இதனால் இந்திய அணியின் பேட்டிங் நீளம் எட்டு வரை நீண்டது.

இதற்கு அடுத்து பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக இடது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை கொண்டு வந்தது. இந்த இரண்டு முடிவுகளுமே இந்திய அணிக்கு நல்ல தாக்கத்தை கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ரோகித் சர்மா உடன் விராட் கோலியை துவக்க ஆட்டக்காரராக அனுப்பியது சரியாக வரவில்லை. ரோகித் சர்மா ஓரளவுக்கு பேட்டிங்கில் செயல்பட்டு இருந்தாலும் கூட, விராட் கோலி 3 போட்டிகளிலும் சேர்த்து ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஆனாலும் கூட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்கட்டக்காரர்களாக வருவதை மாற்றக் கூடாது என வாசிம் ஜாபர் காரணங்களுடன் விளக்கி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து வாசிம் ஜாபர் கூறும் பொழுது “இப்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உடன் நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இருவரையும் பிரிப்பதால் நிலைமைகள் சிக்கலாகும். ஒருவேளை ஜெய்ஸ்வால் விளையாடுவதைப் பற்றி நீங்கள் நினைக்கலாம். இப்படி ஏதாவது செய்தால் ரிஷப் பண்ட்டை கீழே இறக்க வேண்டும். மேலும் சூரிய குமாரும் கீழே இறங்க வேண்டும். இது பல குழப்பங்களை உருவாக்கி விடும். எனவே தற்போதைய துவக்க ஜோடியை பிரிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : எல்லாமே உங்களாலதான்.. நீங்க கிரிக்கெட் பற்றி கவலைப்பட வேண்டாம்.. கொதித்து எழுந்த மிட்சல் ஸ்டார்க

ரிஷப் பண்ட் மூன்றாம் இடத்தில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். மேலும் நீங்கள் சூரியகுமார் யாதவை இதற்கு மேல் கீழே விளையாட வைக்க விரும்ப மாட்டீர்கள். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி பவர் பிளேவில் அதிரடியாக ஆரம்பித்தது. நம்முடைய துவக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அப்படி செய்ய வேண்டும்”என்று கூறியிருக்கிறார்.

Published by