ஜெய்ஸ்வால் 4 போட்டியில் 39 ரன்.. ஆனா ரோகித் சர்மா கவலையே பட மாட்டார்.. காரணம் இதுதான் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

0
827
Rohit

நடப்பு 17 வது ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக, இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் துவக்க இந்திய ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இருப்பார் என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது அவர் 4 போட்டிகளில் வெறும் 39 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் சில அறிவுரைகளை கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. டாப் ஆர்டரில் ஜோஸ் பட்லர் கடந்த போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக சதம் அடித்தார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதல் போட்டியிலும் கடைசி போட்டியிலும் அரை சதம் அடித்து கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக இருந்து வருகிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் நடப்பு ஐபிஎல் தொடருக்கு பெரிய எதிர்பார்ப்புடன் வந்த ஜெய்ஸ்வால் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர் முதல் பந்தில் இருந்தே பெரிய ஷாட் அடிக்க சென்று விக்கெட்டை கொடுத்து வருகிறார். அவர் அதிரடியான ப்ளாஸ்டர் ரோல் செய்யவே விரும்புகிறார். நேரம் கொடுத்து விளையாடி ரன்கள் கொண்டுவரும் ஆட்டத்தில் அவர் ஈடுபடவில்லை. டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கான தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது இது கவலை அளிப்பதாக இருக்கிறது.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறும் பொழுது “அவர் நீண்ட காலமாக சிறந்த பார்மில் இருந்து வருகிறார். மேலும் உங்களைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு இல்லாத பொழுது உங்களை வெளிப்படுத்திக் கொள்வது எளிது. ஆனால் தற்பொழுது அவர் பெரிய வீரராக மாறி இருக்கிறார். எனவே அந்த பெயருக்கு ஏற்றபடி அவர் பெரிய முயற்சிகள் செய்து சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்.

அவர் முதலில் பேட்டிங்கில் தனக்கான நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும். தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தனது இயல்பான ஆட்டத்தை விளையாட முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் உங்களுடன் இருப்பவர் ஜோஸ் பட்லர். இதனால் பெரிய ரன் அழுத்தம் இருக்காது. மேலும் உங்களுக்கு நேரம் சரியில்லாத பொழுது பெரிய முயற்சிகளை தாங்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நிதிஷ் ரெட்டி பேட்டிங் ப்ளுக் இல்ல.. அதுதான் கிரிக்கெட்… போன வருஷமே அந்த பையன தெரியும் – பிரையன் லாரா பேட்டி

இதை கருத்தை பேசி உள்ள நியூசிலாந்தின் மெக்கலகன் “ஜோஸ் பட்லர் சதம் அடித்த கடைசி போட்டிக்கு முன்பாக வரை ரன் ரேட்டை சிறப்பான வகையில் வைக்கிறதுக்கான அழுத்தம் ஜெய்ஸ்வால் மீது இருந்தது. அப்பொழுது ஜோஸ் பட்லர் கொஞ்சம் சிரமப்பட்டார். இப்பொழுது ஜெய்ஸ்வால் நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் டி20 உலக கோப்பையில் நாம் எதிர்பார்க்கும் ஜெய்ஸ்வால் அது கிடையாது. ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடக் கூடியவரைத்தான். ரோகித் சர்மா அப்படி பாசிட்டிவாக விளையாடுவதைத்தான் விரும்புகிறார். தன் அணியின் வீரர்கள் பேட்டிங்கில் ஆக்ரோஷமாக இருக்க நினைக்கிறார். அதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார்” என்று கூறியிருக்கிறார்.