அடுத்த மாதம் துவங்க இருக்கின்ற ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஆசியக் கோப்பை அடுத்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 19ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாட இருப்பதாக அட்டவணை தெரிவிக்கிறது.
இந்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கி விட்டன. மேலும் இந்திய தேர்வுக் குழு ஆசிரியர் கோப்பைக்கான இந்திய அணியை நேற்று அறிவித்துவிட்டது. இதனால் இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டு விட்டது.
அதே சமயத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுமா? என்பது குறித்து இன்னும் தெளிவான உறுதி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கொடுக்கப்படவில்லை. இந்திய அணி கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசும் பொழுது “ஆசியக் கோப்பை அட்டவணை அறிவிக்கப்பட்டது. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். எங்களுக்கு எதிர்வினைகள் வரும் என்று தெரியும். ஆனால் நாங்கள் மிகவும் அமைதியாகவும் வசதியாகவும் இருக்கிறோம். நாங்கள் விளையாடினாலும் சரி விளையாட விட்டாலும் சரி விளையாட்டு தொடர்ந்து நடக்க வேண்டும்”
இதையும் படிங்க : கம்பீரின் செல்லப் பிள்ளைகளுக்கு வாய்ப்பு.. சிஎஸ்கே பையனை செலக்ட் பண்ணது அர்த்தமே இல்லாதது – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“என்னுடைய வாழ்நாளில் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை பார்ப்பேன் என்று நம்புகிறேன். ஆனால் இந்தியர்கள் நிச்சயமாக வேறு ஒரு கண்ணோட்டத்தில்தான் இருப்பார்கள். இறுதியில் நான் அரசியல்வாதி கிடையாது. தாங்கள் தேசபக்தி கொண்டவர்கள் அதேபோல இந்தியர்களும் தேசபக்தி கொண்டவர்கள். இருவருமே பெல்ட்டை தாண்டி செல்ல வேண்டாம். நீங்கள் நாட்டின் வெற்றிகளை பேசுங்கள். நாங்கள் எங்கள் நாட்டின் வெற்றிகளை பேசுகிறோம். இரு நாடுகளுக்கும் இதுவே பொருத்தமானது” என்று கூறியிருக்கிறார்.