“ஒரு பையன பத்தி சொல்ல வார்த்தையே இல்ல.. இன்னொரு பையன் விளையாடறதே இதமா இருக்கு” – ஏபிடிவில்லியர்ஸ் பேட்டி

0
246
Devilliers

இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி உள்நாட்டில் வெல்லும் பொழுது, அந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான வெற்றியாக பதிவாகும்.

ஏனென்றால் அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்கள் கொண்ட அணியை வழிநடத்தி ரோஹித் சர்மா சென்று கொண்டிருக்கிறார். எனவே இளம் இந்திய வீரர்களை வைத்து வெல்லப்படும் இந்த தொடர் இந்திய கிரிக்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து தொடரில் இளம் வீரர்களை வைத்து கிடைக்கும் வெற்றி என்பது, இதற்கு அடுத்து பத்து ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் எந்த வீரர்களுடன் பயணிக்க போகிறது என்பதையும் முடிவு செய்வதாக இருக்கும்.

மூத்த வீரர்கள் இல்லாமல் கிடைக்கக்கூடிய வெற்றியின் காரணமாக, இந்திய கிரிக்கெட் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். மேலும் இது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிகவும் நிம்மதி தரக்கூடிய விஷயமாக மாறி இருக்கிறது.

இந்திய இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், கில், துருவ் ஜுரல் ஆகியோர் இந்தியா தாண்டி வெளிநாட்டு முன்னாள் வீரர்களிடமும் பெரிய கவனத்தை ஈர்த்து இருக்கிறார்கள். இவர்களுக்கு உலகெங்கும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் சவுத் ஆப்பிரிக்க லெஜன்ட் ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “சர்பராஸ் கானுடன் நான் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறேன். அந்தப் பையன் மிகவும் அற்புதமான குணம் கொண்டவன். அவனைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவன் அரை சதம் அடித்ததும், அவன் அப்பா அவனுடைய டெஸ்ட் தொப்பிக்கு மொத்தம் கொடுத்ததை பார்க்கவும் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.

கில் அழுத்தத்தில் இருந்தால் மேலும் அவர் நல்ல பேட்டிங் பார்மிலும் இல்லை. ஆனாலும் அழுத்தத்தின் கீழும் மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாடியிருக்கிறார். அதுவும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் விளையாடி இருக்கிறார். தற்பொழுது இந்திய அணியில் மூச்சு விடுவதற்கு அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

இதையும் படிங்க : வீடியோ.. 6 பந்துக்கு 6 சிக்ஸர்.. ரைட் ஹேண்ட் யுவராஜ் சிங்.. ஆந்திர வீரர் காட்டிய அதிரடி

ஜெய்ஷ்வால் பற்றி சொல்ல போதுமான வார்த்தைகள் இல்லை. அவருடைய ஆக்ரோஷமான பேட்டிங் ஆட்டத்தை எளிமையாக மாற்றுகிறது. அவர் விளையாடுவதை பார்க்க நான் விரும்புகிறேன். மேலும் எப்பொழுதும் பந்துவீச்சாளர்களை அழுத்தத்திலேயே வைத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.