இந்தியாவில் நடைபெறும் உலககோப்பையை பாகிஸ்தான் தான் வெல்லும் – வசீம் அக்ரம்

0
93

2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் தொடங்குகிறது.  2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் இந்த தொடர் நடைபெறுகிறது.
இதேபோன்று தொடர் முழுவதும் இந்தியாவே தனியாக நடத்துவதும் இதுவே முதல் முறை.

- Advertisement -

ஏற்கனவே 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நடத்தியது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை இந்தியா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மூன்று நாடுகளும் இணைந்து நடத்தியது. ஆனால் இந்த தொடர் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் நடைபெற உள்ளது.

இதனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய வசீம் அக்ரம், உலக கோபை வெல்ல  பாகிஸ்தானுக்கு இம்முறை வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது என்று பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அது குறித்து பேசிய அவர் இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது சிறந்த அணியாக விளங்குகிறது. ஆனால் பாகிஸ்தானில்  உலகத்தின் சிறந்த பேட்ஸ்மேன் கேப்டனாக இருக்கிறார். இதைப் போன்று பாகிஸ்தானின் பந்துவீச்சு மிரட்டும் அளவிற்கு இருக்கிறது. ஷாகின்  ஆப்ரிடி இப்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். பேட்டிங்கில் ஒரு ஆல்ரவுண்டராக தன்னை தரம் உயர்த்தி இருக்கிறார்.

இதேபோன்று ஹாரிஸ் ,நசீம் ஷா, முகமது ஹூஸ்னாயின் போன்ற சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் இருக்கிறார்கள். இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறுவதால் எந்த அணி பலமான பந்துவீச்சாளர்களை வைத்திருக்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். ஏனென்றால் இங்கு உள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக தான் செயல்படுகிறது.

இதேபோன்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் பேசிய போது உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற்றாலும் இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடியவர்கள் என்று அவர்  கூறியுள்ளார்.

- Advertisement -