இந்திய அணி இப்ப எங்க கூட டெஸ்ட் ஆட வாங்க.. தோக்கடிச்சு காட்டுறோம் – வாசிம் அக்ரம் கருத்து

0
115
Akram

தற்போது இருக்கும் இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்வதற்கு முடியும் என பாகிஸ்தான் லெஜெண்ட் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பரபரப்பான கருத்து ஒன்றை ஆஸ்திரேலியாவில் இருந்து தெரிவித்திருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்று விளையாடி கொண்டு வருகிறது. இந்தத் தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளராக பங்கேற்று இருக்கும் வாசிம் அக்ரம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

அம்பலப்பட்ட முக்கிய பலவீனம்

இந்திய அணி தற்பொழுது பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டுமே சிறப்பாக விளையாடக்கூடிய வகையில் தெரிகிறது. அப்படியான ஆடுகளத்தில் இந்திய அணியை மற்ற அணி பந்துவீச்சாளர்களால் தடுக்க முடியவில்லை. ஆனால் வேகம் மற்றும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணி தடுமாற்றமான பேட்டிங்கை கொண்டு இருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்து முதல் நாளில் ஆரம்பத்தில் நன்றாக சீமிங் ஆன காரணத்தினால் இந்திய அணி வெறும் 46 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதற்கு அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் கொடுக்கப்பட்டது. இதிலும் இந்திய அணியின் பேட்டிங் மிக மிக மோசமாக இருந்தது. இதனால் மூன்று டெஸ்ட் போட்டிகளையும் நியூசிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் தோற்றது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தும்

தற்போது சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான பேட்டிங்கை கொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த நாட்டில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை பாகிஸ்தான அணி வென்று இருக்கிறது.

இதையும் படிங்க : கம்பீரிடம் முக்கிய அதிகாரத்தை பறிக்கும் பிசிசிஐ.. ஆஸி தொடரே கடைசி – வெளியான புதிய தகவல்கள்

தற்போது இது குறித்து பேசி இருக்கும் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இந்தியா பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதிக்கொண்டால் அது மிகப் பெரிய போட்டியாக அமையும். இது கிரிக்கெட்டுக்கு நல்லதாக அமையும்.மேலும் தற்போது சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் தோற்கடிக்க வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஏனென்றால் இந்திய அணி இப்படியான ஆடுகளங்களில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த நாட்டில் ஒயிட் வாஸ் ஆகி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -