இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் ஆன காரணத்தினால் தலைமை பயிற்சியாளர் கம்பீரிடம் இருந்து ஒரு முக்கிய அதிகாரத்தை பிசிசிஐ பறிக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த காரணத்தினால் தற்போது இந்திய கிரிக்கெட்டில் நிறைய குழப்பங்கள் சென்று கொண்டிருக்கிறது. மேலும் மொத்த அணி மற்றும் அணி நிர்வாகம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளியில் இருந்து வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் சூழல் சரியானதாக இல்லை.
இரண்டு வரலாற்று தோல்விகள்
கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற முதல் சுற்று பயணத்திலேயே, இலங்கை அணிக்கு எதிராக 27 வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழந்து இந்திய ரசிகர்களுக்கு முதல் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அங்கு சுழல் பந்துவீச்சுக்கு அதிக சாதகம் இருந்ததால் அப்படியான விபத்து ஏற்பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்தது.
தற்போது உள்நாட்டிலேயே தங்களுடைய விருப்பத்திற்கு ஆடுகளத்தை அமைத்துக் கொண்ட போதிலும் கூட, இலங்கை அணி இடம் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்திருந்த நியூசிலாந்து அணியை இந்திய அணி வெல்ல முடியாமல் ஒயிட் வாஸ் ஆகி இன்னொரு பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஒன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் இந்திய அணி 92 வருட தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒருமுறை கூட ஒயிட் வாஸ் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பறிக்கப்படும் முக்கிய அதிகாரம்
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பெரிதாக எதுவும் செய்யாவிட்டால், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இனி இந்திய அணி தேர்வுக்குழு கூட்டங்களில் பங்கேற்க முடியாது என்று செய்திகள் தெரிவிக்கிறது. எந்த பயிற்சியாளருக்கும் வழங்கப்படாத இந்த அதிகாரம் கம்பீருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இறுதியாக அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டத்திலும் கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரோகித் அந்த விஷயத்தை நம்பல.. அதனாலதான் அதிரடியா ஆடறாரு.. இது தப்பு – தினேஷ் கார்த்திக் விமர்சனம்
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும் பொழுது “பிசிசிஐயின் விதி புத்தகத்தில் தேர்வுக்குழு கூட்டங்களில் பயிற்சியாளர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. ரவி சாஸ்திரி ராகுல் டிராவிட் ஆகிய ஒரு தேர்வுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டதில்லை. முதல் முறையாக கம்பீருக்கு விதியில் திருத்தம் செய்து அனுமதி கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி தேர்விலும் அவர் கலந்து கொண்டார். ஆனால் இனி இந்த அதிகாரம் அவருக்கு கிடைக்காது என்று தெரிகிறது” எனக் கூறியிருக்கிறார்.