ஜேசன் ராய் பாகிஸ்தானில் இருப்பதை மறக்கக்கூடாது.. எங்களை மதிக்கனும் – வாசிம் அக்ரம் கோபம்

0
389
Akram

ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வாங்கப்பட்ட ஜேசன் ராய் திடீரென தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக அறிவித்திருந்தார். ஏற்கனவே இவரை மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியிருந்த பொழுதும், இதே போல் திடீரென விலகி இருந்தார். பின்பு மினி ஏலத்தின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக பாகிஸ்தானில் பி எஸ் எல் தொடர் நடப்பது வழக்கம். இதில் ஜேசன் ராய் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். தற்பொழுது இந்த சீசனில் ஒன்பது போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 28 ஆவரேஜுடன் 148 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு 258 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருக்கு நல்லதொரு சீசனாக இது அமையவில்லை. இதைத்தொடர்ந்து அப்படியே ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறவும் செய்திருக்கிறார்.

- Advertisement -

மார்ச் 12ஆம் தேதி முல்தான் சுல்தான் அணிக்கும் ஜேசன் ராய் விளையாடும் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் இப்திகார் அகமத் மற்றும் ஜேசன் ராய் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு, தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

குறிப்பிட்ட அந்தப் போட்டியில் சக இங்கிலாந்து வீரரான டேவிட் வில்லி ஜேசன் ராயை எல்பிடபிள்யு மூலம் விக்கெட் வீழ்த்த செய்தார். இந்த நேரத்தில் ஜேசன் ராய் தன்னுடைய பார்ட்னர் இடம் ரிவ்யூ செய்யலாமா என்பது குறித்து விவாதிப்பதற்கு நகர்ந்தார். அப்பொழுது அவரைத் தாண்டிச் சென்ற இப்திகார் அகமது ஏதோ ஒன்றைக் கூற, இருவருக்குள்ளும் பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது.

இந்த நிலையில் உள்ளே வந்த முகமது ரிஸ்வான் ஜேசன் ராயை அமைதிப்படுத்தினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்பொழுது ஜேசன் ராய் ரிவ்யூ கேட்பதற்கான 15 நொடிகளை கடந்து விட்டார். இதனால் அவரால் ரிவ்யூ கேட்க முடியவில்லை. இதை அடுத்து அவர் இன்னும் கோபமடைந்து களத்தில் ஏதோ கடுமையாக கூறிவிட்டு சென்றார். தற்பொழுது இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து வீரரான ஜேசன் ராய் பாகிஸ்தான் வீரர்களை துளியும் மதிக்காமல் நடந்து கொள்வதாகவும், இது கொஞ்சம் கூட சரியற்றது என்றும், அவர் செய்த தவறுக்கு அவர் மற்றவர்கள் மேல் கோபப்படுவது நியாயமே கிடையாது என்றும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் வருகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் முக்கியமில்லை.. 2021 நடந்த தப்பு.. அகர்கர் டி20 உலக கோப்பைக்கு புது ரூட்

இந்த நிலையில் இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது “பிஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் இங்கிலாந்தில் இருப்பதை உணர வேண்டும். அவர் நமது வீரர்களையும் கலாச்சாரத்தையும் மதிக்க வேண்டும். அவர் அவுட் ஆன பிறகு எதற்காக கோபப்பட்டார்? அது அவர் செய்த தவறு. அவருடைய கோபம் அர்த்தம் அற்றது. ஆனால் இதை அவர் தவறாமல் செய்கிறார்” என்று கூறியிருக்கிறார்.