ஐபிஎல் முக்கியமில்லை.. 2021 நடந்த தப்பு.. அகர்கர் டி20 உலக கோப்பைக்கு புது ரூட்

0
333
Agarkar

இந்தியாவில் 17 வது ஐபிஎல் சீசன் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதேபோல் மே 25 அல்லது 26 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏனென்றால் ஜூன் 5ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு நாடுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. புதிய சூழ்நிலையில் இந்திய வீரர்கள் செட்டாகி விளையாடுவதற்கு தகுந்த நேரம் கொடுக்க வேண்டும் என, ஐபிஎல் தொடர் இந்த முறை கொஞ்சம் முன்கூட்டியே முடிய இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்ட பின்பு, டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கு மொத்தம் 11 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே இருந்தன. இதில் மொத்தமாக ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. கடைசி மூன்று டி20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ் விளையாட வில்லை. மேலும் 14 மாதங்கள் கழித்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய டி20 அணிக்கு திரும்ப வந்தார்கள்.

இந்த நிலையில் இந்திய டி20 அணிக்கு பயிற்சியாக தற்பொழுது உலகக்கோப்பை க்கு ஐபிஎல் மட்டுமே இருக்கிறது. எனவே முன்பிருந்து ஐபிஎல் தொடர் டி20 உலக கோப்பைக்கு இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்கான அளவுகோலாக இருக்கும் என பலரும் கூறி வந்தார்கள். ஆனால் இந்திய தேர்வுக்குழு தலைவர் அகர்கர் புதிய முடிவில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

அதாவது அதற்க்கர் ஏற்கனவே டி20 உலகக்கோப்பைக்கு ஒரு இந்திய அணியைத் தேர்வு செய்து விட்டதாகவும். அந்த அணியில் இருக்கும் வீரர்களில் யாராவது ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடினால் மட்டுமே, புதிய வீரர்கள் யாராவது சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பை க்கு ஐபிஎல் தொடரை வைத்து வீரர்களை தேர்வு செய்து இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அகர்கர் இப்படி உலகக் கோப்பை இந்திய அணியை தேர்வு செய்ய விரும்பவில்லை என கூறப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் கூறும் பொழுது “ஐபிஎல் தொடர் முக்கியமானதுதான். ஆனால் டி20 உலக கோப்பைக்கு அணியை தேர்வு செய்வதில் ஐபிஎல் முக்கிய அளவுகோலாக இருக்காது. ஏற்கனவே டி20 உலக கோப்பைக்கு ஒரு குறிப்பிட்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது. அந்த அணியில் இருந்து யாராவது மோசமாக ஃபார்ம் இழந்தால் மட்டுமே, வேறு யாரையாவது ஐபிஎல் தொடரின் ஃபார்ம் வைத்து தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : “ஜெய்ஸ்வாலை பார்த்தா எனக்கே ஆச்சரியமா இருக்கு.. இப்படியே போனா அது நடக்க போகுது” – ரிஷப் பண்ட் பேச்சு

மேலும் இந்த முறை அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இந்திய டி20 அணியில் விராட் கோலியை விரும்பவில்லை என்று தி டெலிகிராப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும் டி20 உலகக்கோப்பை அணி தேர்வுக்கான முக்கிய முடிவுகளை அகர்க்கர் மட்டுமே எடுப்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.