பி எஸ் எல் தொடர் –  2 பாக் வீரர்கள் இடையே மோதல்.. ஆதரவு தந்த வசீம் அக்ரம்

0
543

பாகிஸ்தான் சூப்பர் லீக்  2023 சீசனில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.  களத்திற்கு உள்ளேயும் சரி வெளியேவும் சரி, பல்வேறு காரச்சார விவாதங்கள் அரங்கேறி உள்ளது. இதில் மிகவும் முக்கியமானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸ்ஸாமுக்கும் வேகப் பந்துவீச்சாளர் முகமது அமீருக்கும் ஏற்பட்டுள்ளது .

- Advertisement -

முகமது அமீரை பாகிஸ்தான் அணியில் சேர்க்காமல் பாபர் அசாம் அரசியல் செய்து வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனால் இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. முதலில் இந்த சண்டை தொடங்கியது பாபர் அசாமை கடுப்பேற்றும் வகையில் முஹம்மது  அமீர் பேசியது தான்.

பாபர் அசாம் பந்து வீசுவதும் பந்துவீச்சாளர்களுக்கு பந்து வீசுவதும் எனக்கு ஒன்றுதான் என முகமது அமீர் அளித்து பேட்டி பாபர் அசாம் ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது. மேலும் விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டு அமீர் செய்யும் கொண்டாட்டங்களும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஷாகித் அப்ரிடி உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அமீரின் செயல்களுக்காக  விமர்சித்த நிலையில், புகழ்பெற்ற பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் கராச்சி கிங்ஸின் வழிகாட்டியான வாசிம் அக்ரம் அமிருக்கு ஆதரவாக வந்துள்ளார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசிய அவர், பி எஸ் எல் தொடரில் வீரர்கள் இடையே பகை இருக்க வேண்டும். கடும் போட்டி இருக்க வேண்டும். ஒரு பந்துவீச்சாளராக களத்தில் அமீர் நடந்து கொள்வதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.பிஎஸ்.எல் ஆட்டத்திற்கோ, அல்லது எந்த ஆட்டத்திற்கோ சென்று, பேட்ஸ்மேன்னுடன் கைகுலுக்கி அவர்களை கட்டிப்பிடிப்பதில் என்ன பயன் இருக்கிறது?

சரி, ஆட்டத்திற்கு முன் அல்லது ஆட்டத்திற்குப் பிறகு, வீரர்களுக்கு இடையே மரியாதையாக நடந்து கொள்வது தான் இருக்கிறேன் ஆனால் விளையாட்டின் போது, தொழில்முறையாக இருங்கள், பேட்ஸ்மேன்களுடன் வாய் பேசுங்கள் மேலும் களத்திற்கு வெளியே உள்ள இந்தச் சிறிய வார்த்தைகளும் PSL-க்கு மசாலா சேர்க்கிறது.

அதுதான் PSL-ன் அழகு. இப்படி செய்யும் வீரர்களை விமர்சிப்பதற்குப் பதிலாக நாம் அதை அனுபவிக்க வேண்டும்,” என்று வசீம் அக்ரம் கூறியுள்ளார்.கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி இந்த சீசனில் ஒருமுறை நேருக்கு நேர் மோதியது.

முகமது அமீர் 4 விக்கெட்டுகளை எடுத்தாலும், பாபர் ஆசாமின் பெஷாவர் அணியே வெற்றி பெற்றது. இதனிடையே இஸ்லாமாபாத் பணிக்காக விளையாடும் 24 வயது வீரர் அசாம் கான், ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். பேட்டிங்கில் தனியாக நின்று அணியை வெற்றிக்கு கொண்டு செல்கிறார். அசாம் கான் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொயின் கானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.